விடிய விடிய 'கனமழை' பெய்யும்...! காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போ கரையை கடக்கும்...? அந்த டைம்ல எவ்ளோ 'கிமீ ஸ்பீடுல' காற்று வீச போகுது...? - முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (11-11-2021) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கும் எனவும் இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடிய விடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த பகுதியில் கரையை கடக்கும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய நிலவரப்படி காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் நாளை மாலை புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது கடலில் 50 கிமீ வேகத்திலும், கடலோரப் பகுதிகளில் 30 கிமீ வேகத்திலும், இதரப் பகுதிகளில் மிதமான காற்றுடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவ்பிதுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்னும் எத்தனை நாளைக்கு மழை நீடிக்கும்..? வானிலை ஆய்வு மைய இயக்குனர் ‘முக்கிய’ தகவல்..!
- ‘விட்டுவிட்டு வெளுக்கும் மழை’!.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை மையம் தகவல்..!
- 2015-க்கு பிறகு ‘சென்னையில்’ பதிவான அதிகபட்ச மழை.. இன்னும் எத்தனை நாளைக்கு ‘மழை’ நீடிக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்..!
- சென்னைக்கு 'ரெட் அலர்ட்'டா...? ரொம்ப 'ஜாக்கிரதையா' இருக்க வேண்டிய நேரம் இது...! - வெளியாகியுள்ள புதிய எச்சரிக்கை...!
- சென்னையில் விடாமல் கொட்டி தீர்த்த 'பேய்' மழை...! '2015-க்கு அப்புறம் ஒரு காட்டு காட்டிடுச்சு...' இன்னும் 'கனமழை' தொடருமா...? - தமிழ்நாடு 'வெதர்மேன்' ரிப்போர்ட்...!
- விடிய விடிய கொட்டிய மழை..20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!
- AUDIO: இளம் பெண்களுடன் ’பார்ட்னர்ஷிப்’ யோகா...! சென்னையில் சென்டர், சீன நாட்டில் ஆஃபிஸ்...! 1000 பேரை சீரழித்த ‘யோகா’ மாஸ்டர் - பகீர் பின்னணி! வைரலாகும் ஆடியோ!!
- 'பெருங்குடி TO கலிஃபோர்னியா'... 'மச்சி, அங்க வேல பாத்த 500 பேர் இப்போ கோடீஸ்வரங்கடா'... ஐடி இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்த சென்னை நிறுவனம்!
- “TIRAMAI”: சென்னையைச் சேர்ந்த பிரபல ஸ்போர்ட்ஸ் கிளப், Throttle Sportz World, வழங்கும் 50% முதல் 100% வரையில் Scholarships - விவரம் உள்ளே!
- '4,000 ஊழியர்கள்' தலையில் 'குண்டைத்' தூக்கி போட்ட 'பிரபல' நிறுவனம்...! இனி நாங்க என்ன பண்ணுவோம்...? - கதறும் ஊழியர்கள்...!