இந்தியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்! எவ்வளவு செலவாகும்? அசத்திய தமிழக ஜோடி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்பெல்லாம் திருமணம் என்றாலே வீட்டில் உறவினர்கள் வந்து சடங்கு சம்பிராதயத்துடன் கொண்டாடும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படும்.

Advertising
>
Advertising

முதலில் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அதோடு பல செலவுகளையும் இழுத்து போடும். இன்றைய காலத்தில் திருமணம் என்பது pre wedding shoot, post wedding shoot என புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில திருமண புகைப்படங்கள் எல்லாம் இந்திய அளவில் வைரலாகியும் உள்ளன.

உலகம் மாறிக்கொண்டு வரும் சூழலில் நாமும் மாற்றமடைவது ஆரோக்கியமானதே. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்நுட்ப வசதி காரணமாக ஜூம், ஸ்கைப், கூகுள் மீட் என பல வகைகளில் திருமணங்கள் நடந்து வருகிறது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி:

தற்போது புதிய தொழில்நுட்பத்தில் மெட்டா வெர்ஸ் என்ற வடிவில் திருமணங்கள் நடைபெறும் காலத்திற்கு நாம் மாறி இருக்கிறோம். அதாவது திருமண வரவேற்பை டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு நடத்துவதற்கான முறைதான் மெட்டா வெர்ஸ். சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இந்த புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார். சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பில் இருக்கும் தினேஷ் மெட்டா வெர்ஸ் உதவியுடன் தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

மெட்டா வெர்ஸ் :

இவருக்கு வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த வரவேற்பின் போது மணமகனும் மணமகளும் தங்களுக்குப் பிடித்த தோற்றத்தோடு மெட்டா வெர்ஸ் வருவார்கள். அந்த லிங்க் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து, திருமண நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் அந்த லிங்கை கிளிக் கிளிக் செய்து திருமண வரவேற்பில் கலந்து கொள்ளலாம்.

செல்போனில் கேம் விளையாடுவது போன்றது:

அவர்கள் உடனடியாக மணமேடை அலங்கரிக்கப்பட்டு மணமகனும் மணப்பெண்ணும் புது ஆடை உடுத்தி மாலை அணிந்து அனைவரிடமும் பேசுவது போன்ற ஒரு நிகழ்வு வடிவமைக்கப்படும். இந்த தொழில்நுட்பம் கிட்டத்தட்ட செல்போனில் கேம் விளையாடுவது போன்று தான். இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் சிறப்பு என்னவென்றால் மணமகளின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலமாகியுள்ளார்.

அவரையும் இந்த திருமணத்தில் பங்கேற்க வைக்கலாம். இது தினேஷின் வருங்கால மனைவியின் விருப்பம். அதேபோல், மாமனாரையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தோடு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவம் கொடுத்து கண் முன் நிறுத்துகிறார் மாப்பிள்ளை தினேஷ். ஆசியாவில் முதன் முதலில் நடக்கும் மெட்டா வெர்ஸ் திருமணம் இதுவே முதல்முறை. இந்த வரவேற்ப்பில் பங்கேற்பவர்கள் தங்களுடைய குரல் மூலம் வாழ்த்து தெரிவிப்பது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும் முடியும். மெட்டா வெர்ஸ் மூலம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

வரும் காலங்களில் ஏராளமான திருமணங்கள் இதன்மூலம் நடக்கயிருப்பதாக தினேஷ் நம்பிக்கை தெரிவிக்கிறார். திருமணச் செலவைக் குறைத்து அனைவரும் ஒரே நேரத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதிய முன்னெடுப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

METAVERSE, MARRIAGE, TAMILNADU, COUPLE, திருமணம், மெட்டாவெர்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்