பார்வை மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் & 'முதல் முறையாக' வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் இன்று தேர்தல் நிகழும் நிலையில், 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் தேனாம்பேட்டை வாக்குச் சாவடியில் 39 வயதான திருநங்கை மேகலா வாக்களித்தார்.
மேலும், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மன நலம் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 159 மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று அகில இந்திய ஜனநாயக நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ள நிகழ்வு நெகிழ வைத்துள்ளது.
இவர்களில் ஆண்கள் 103 பேரும் பெண்கள் 56 பேரும் அடங்குவர். இவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்னை தண்டையார்பேட்டை வாக்குச்சாவடிக்குச் சென்று காவலர்களின் உதவியுடன் வாக்களித்தனர். நெல்லையிலும் 30 பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாக்கு இயந்திரத்தின் உதவியுடன் வாக்களித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்!
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.. இயந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்குப் பதிவு!
- ‘போதிய பேருந்துகள் இயக்காததால், கொந்தளித்த பயணிகள்.. தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கிறேன்’!
- 'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
- ‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா?
- 'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ!
- ’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’!
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!