தமிழகத்தை அதிர வைத்த ATM கொள்ளை.. போலீசின் தரமான ஸ்கெட்ச்.. சிக்கிய கொள்ளை கும்பலின் தலைவன்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தையே அதிர வைத்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து 72,79,000 ரூபாய் களவு போயிருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உடனடியாக வரைந்து வந்த போலீசார் இது குறித்த விசாரணையில் இறங்கினர்.

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். வேலூர் சரக காவல் துணைத் தலைவர் முத்துச்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கின. சிசிடிவி பதிவுகள் மூலம் இந்த கொள்ளையில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஆந்திரா, குஜராத் ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்தன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஆரிப் மற்றும் முகமது ஆசாத் ஆகிய இருவரையும் ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொகையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளைக்காக இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

முகமது ஆரிப் ஹரியானாவில் உள்ள சோனாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஆசாத் புன்ஹானா மாவட்டத்தில் உள்ள மைமாகேர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் உடந்தையாக இருந்த மற்றவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ATM, THEFT, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்