மீம் கிரியேட்டரின் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்.. Template ல் தெறிக்கவிட்ட பலே இளைஞர்.. அந்த அட்ரஸ் மீம் தான் வெயிட்டே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மீம் கிரியேட்டர் ஒருவர் தனது புதுவீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கான அழைப்பிதழையும் மீம் வடிவிலேயே உருவாக்கியிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கனவு நிறைவேறும் தருணம் அது".. தரைமட்டமாகும் 100 மீ கட்டிடம்.. இறுதி முடிவை எடுக்கும் நிபுணர் சொல்லிய தகவல்..!

மீம்

சமூக வலைதளங்களின் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். பல விஷயங்களை எளிமையான வடிவில் அதே நேரத்தில் நகைச்சுவையுடன் சொல்ல மீம்-ஐ விட்டால் வேறு வழியில்லை. இணையத்தின் வீச்சு அதிகரித்திருப்பதன் பலனாக பல இளைஞர்கள் தங்களது கற்பனா சக்தியினை படுபயங்கரமாக வெளியுலகிற்கு வெளிப்படுத்திவருகிறார்கள். அந்தவகையில் இளங்கோவன் என்னும் இளைஞர் ஒருபடி மேலே போய், புதுமனை புகுவிழா அழைப்பிதழை மீம் வடிவிலேயே அச்சடித்திருக்கிறார்.

"அங்க என்ன ஒரு புது பில்டிங் இருக்கு" என வடிவேலு - ரஜினிகாந்த் டெம்ப்ளேட் மூலம் துவங்கும் இந்த பத்திரிக்கையில் "அது எங்க வீடுதான். புதுசா கட்டிருக்கோம். அதுக்கு உங்கள இன்வைட் பண்ணத்தான் நான் வந்திருக்கேன்" என ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது. அதை தொடர்ந்து "காலையில் 6.30 மணிக்கு தான் பால் காய்ச்சுறோம்" எனவும் "6.30 மணிக்கு மேல காய்ச்சுனா பால் காயாதா?" என பிரெண்ட்ஸ் பட டெம்பிளேட்டில் பக்காவாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார் இளங்கோவன்.

விருந்து

அதைத் தொடர்ந்து விருந்து நடைபெறும் எனவும் மீம் மூலமாகவே குறிப்பிட்டிருக்கும் அவர், தனது வீட்டுக்கான முகவரியை சொல்லிய விதம் நெட்டிசன்களை வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறது. இறுதியாக, அழைப்பிதழின் இறுதிப் பக்கத்தில் மனுஷன் போட்டிருக்கும் குறிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. அதில்,"அப்பனே முருகா, விசேஷத்துல எல்லோரும் வயிறார சாப்பிட்டு, மெய் சிலிர்த்து பை நிறைய மொய் வச்சா, உனக்கு நெய் அபிஷேகம் பண்றேன்னு பொய் சொல்லாம, தினமும் உன் கோவிலுக்கு வந்து புளியோதரையும் சுண்டலும் சாப்பிட்டு போறேன்" என குறிப்பிட்டிருக்கிறார் மிரட்டல் மீம் கிரியேட்டரான இளங்கோவன்.

இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "ஐயையோ இதுமேலயா தோட்டத்தை வச்சிருந்தோம்".. வீட்டை பெருசாக்க நெனச்ச ஓனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு ஸ்பாட்டில் குவிந்த ஆராய்ச்சியாளர்கள்..!

MEME CREATOR, HOUSE WARMING, HOUSE WARMING INVITATION, MEME CREATOR HOUSE WARMING INVITATION, புதுமனை புகுவிழா அழைப்பிதழ், மீம் கிரியேட்டர்

மற்ற செய்திகள்