'கனவுல தான் என்ன அரெஸ்ட் பண்ண முடியும்'... 'சவால் விட்ட நடிகை மீரா மிதுன்'... 'கேரளாவில் வைத்து அதிரடி கைது'... பின்னணி காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கனவில்தான் என்னைக் கைது செய்ய முடியும் என காவல்துறைக்கு மீரா மிதுன் சவால் விடுத்திருந்தார்.

2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன். இவர் ட்விட்டர் பக்கத்தில், பட்டியலின மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னைக் கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார். இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்ற செய்திகள்