வீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்குவது எப்படி?.. தமிழக அரசு அசத்தல் திட்டம்!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டிலிருந்துகொண்டே மீன்களை வாங்கும் வகையில் புதிய திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பொதுமக்களுக்கு பயனளித்திடும் வகையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீன் அங்காடிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகரத்தின் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மீன் மற்றும் மீன் உணவுகளை விற்பனை செய்திட, www.meengal.com என்ற இளையதளம் மற்றும் தொலைபேசி எண் 044 2495 6896 உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பொது மக்களுக்கான மீன் விற்பனை திட்டத்தினை மேலும் விரிவுபடுத்திடும் வகையில், 'இது நம்ம ஊரு மீன்கள்' என்ற வணிக அடையாள சின்னம் அறிமுக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி Meengal என்ற செயலியும் பொதுமக்களுக்காக அறிமுகப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி சென்னையில் சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகள் மூலம் சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு மக்கள் மீன்களை வீட்டிலிருந்தே வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மீன்களை வாங்க முடியும் என்றும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் பிரத்யேகமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவை 'சிறப்பாக' கையாளுவதில்... உலகிலேயே இவர்தான் 'பெஸ்ட்' தலைவர்... யாருன்னு பாருங்க!
- காபி போட்டு தர மறுத்த மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்!.. பெங்களூருவில் பரபரப்பு!
- ஊரடங்கு நேரத்துல இப்டியா 'எல்லை' மீறுவீங்க?... 'திருமணமாகாத' ஜோடிக்கு கிடைத்த 'கடுமையான' தண்டனை!
- கடைசில 'சந்திர மண்டலத்துக்கு' போற மாதிரி 'ஆக்கிட்டாங்களே...' 'இருந்தாலும் பாதுகாப்புதான் முக்கியம்...' 'அசத்தும் தஞ்சை போக்குவரத்துக் கழகம்...'
- அமெரிக்காவில் 'இது' மட்டும் நடந்தால்... 'எச்சரித்த' அதிகாரியை 'கடுமையாக' சாடிய 'ட்ரம்ப்'... வெளியான 'புது' விளக்கம்...
- 'மருந்து இல்ல; ஆனா நோய் எதிர்ப்புச் சக்திக்காக இத குடிங்க!’.. 'அரசே வழங்கும்!'.. முதல்வர் அதிரடி!
- விலங்குகளையும் அச்சுறுத்தும் கொரோனா!.. 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- ‘2020 வது வருஷம் இறுதி வரைக்குமா?’.. ‘ஸ்ட்ரிக்டாக’ அறிவித்த பிரிட்டன் அரசு!
- உலக நாடுகளில் 'உண்மையான' உயிரிழப்பு எண்ணிக்கை... எவ்வளவு 'அதிகமாக' இருக்க 'வாய்ப்பு?'... அறிக்கை கூறும் 'புதிய' தகவல்...
- உதவி கேட்ட இளைஞர்... "என்கிட்ட சொல்லிடீங்கள்ல"... "நான் பாத்துக்குறேன்"... மாஸ் காட்டிய முதல்வர்!