MIDAS 2022 நிகழ்வில் பாராட்டுகளை குவித்த மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நவம்பர் 02, சென்னை: சென்னை மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சமீபத்தில் நடைபெற்ற MIDAS 2022 தமிழ்நாடு மாநில மாணவர் மாநாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது, இது ஐடிஏ மெட்ராஸ் கிளை நடத்திய அறிவியல் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வாகும்.
அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட 20 பல் மருத்துவக் கல்லூரிகளில், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்களும் கலந்துகொண்டனர். கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ழான இந்நிகழ்வின் வெற்றியாளராக முதல் இடத்தையும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் பிடித்துள்ளனர்.
இவை மட்டுமன்றி, விளையாட்டுப் போட்டிகளிலும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று, மேலும் ஒரு வெற்றியைப் பெற்றனர்.
எளிய மக்களுக்காக 1983 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவப்பட்டது, நாட்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்திலான, பொருத்தமான, சமகால மற்றும் உயர்தர கல்வியை வழங்கும் நோக்கத்துடன் திகழ்ந்து வரும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தமது அபாரமான சாதனைகளுக்காக ஏகோபித்த வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய ஆயுஷ் நடத்தும் யோகா நிகழ்ச்சிக்கு, 100 நிறுவனங்களில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு!
- தேசிய யோகாசனா சாம்பியன்ஷிப் - மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன யோகா மாணவிகள் சாதனை
- மகளிர் தினத்தன்று.. யோகாவில் புதிய சாதனை படைத்த மீனாட்சி கல்லூரி மாணவி.. குவியும் பாராட்டு
- விதைகள் விருட்சமாகி வெளியேறும் விழா... மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடெமியில் நெகிழ்ச்சி