'விடுதியில் மர்மமாக இறந்த'.. 'மருத்துவக் கல்லூரி' மாணவிக்கு 'கொரோனா' தொற்று 'இல்லை'.. வெளியான பரிசோதனை முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த பிரதீபா என்கிற மருத்துவ கல்லூரி மாணவி சென்னை பெரம்பூரில் தங்கி வந்திருந்த நிலையில் கடந்த 16ம் தேதி முதல் ஊரடங்கு காரணமாஅக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதி அறை எண் 6-ல் தங்கினார்.
அன்று இரவு பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அவர் சக தோழிகளிடமும் தன் பெற்றோரிடமும் இயல்பாக பேசிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காலை, தோழிகள் பிரதிபாவின் அறை திறக்கப்படாததால் சந்தேகப்பட்டு கதவை தட்டினர். அப்போதுதான் பிரதீபா மர்மமான முறையில் மயங்கியவாறு இருந்தது தெரியவந்தது.
அதன் பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவரது தோழிகள் கொண்டு செல்லும்போது பிரதீபா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி கூறிய பிரதிபாவின் பெற்றோர், “போனில் கூட சந்தோஷமாகத் தான் பேசினாள்” என்றும் பிரதிபாவின் தோழிகள், “பிரதீபா மிகவும் அமைதியானவர்” என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் பயிற்சி மருத்துவராக பிரதீபா பணியாற்றியதாக கூறப்பட்டது. இதனால் பிரதீபாவின் மரணம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னையும் நம்ப வச்சு'... 'சுஜி டார்கெட் செய்த பெண்கள்'... 'லேப்டாப்பில் இருக்கும் மர்மம்'... தமிழகத்தையே உலுக்கும் தகவல்கள்!
- 'கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'மத்திய அரசுக்கு'... 'யுஜிசி குழு முக்கிய பரிந்துரை'!
- 'தொடரும் ஊரடங்கு'... 'கல்லூரித் தேர்வுகள் எப்போது நடக்கும்'?... உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
- உணவின்றி தவித்த ஏழைகள்!.. 8 நாட்களில் ரூ.6 லட்சம் நிதி திரட்டிய... 6ம் வகுப்பு மாணவி!
- '30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும்’... ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’... ‘சீனாவில் இருந்து இந்தியாவிற்கு எப்போது வருகிறது?’
- 'கொரோனாவைத் தடுக்க'... 'வெளிநாட்டிற்கு சென்ற'... 'இந்திய மருத்துவக் குழு'... காரணம் இதுதான்!
- பள்ளி, கல்லூரிகள் 'திறப்பது' மீண்டும் தள்ளிப்போகுமா?... வெளியான 'புதிய' தகவல்!
- 'விடுமுறையால்' ஊரில் இருந்தபோது... கண் 'இமைக்கும்' நேரத்தில் நிகழ்ந்த 'பயங்கரம்'... கிராமத்தையே 'சோகத்தில்' ஆழ்த்தியுள்ள சம்பவம்...
- பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' திறப்பது குறித்து... 'இந்த' தேதியில் முடிவு செய்யப்படும்: மத்திய அமைச்சர்
- ‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...