‘திருமணமான 40 நாட்களில்’... ‘கல்லூரி திரும்பிய மருத்துவ மாணவி’... ‘எடுத்த விபரீத முடிவால் பதறிய பெற்றோர்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய முதுநிலை மருத்துவ மாணவி, விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்தவர் தென்னிவளவன். இவரது 22 வயதான மகள் கயல்விழி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.எஸ் படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கு அண்மையில் தான், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் மருத்துவ படிப்பு பயின்று வரும் சக்தி கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சுமார் 40 நாட்கள் திருமண விடுப்புக்கு பின் அண்மையில் கல்லூரி திரும்பிய கயல்விழி, யாருடன் அதிகம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை தனியறையில் தங்கியிருந்த கயல்விழியை கல்லூரிக்கு அழைத்து செல்ல அவருடன் படிக்கும் மாணவிகள் வந்தபோது அறை பூட்டியிருந்துள்ளது. வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால், மாணவிகள் சந்தேகத்துடன் கதவை உடைத்து திறந்தபோது, கயல்விழி தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீசார், உடலை உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கயல்விழி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருச்சி வந்த அவரது பெற்றோர், கதறி துடித்தனர். கயல்விழியின் உடலில் காயமிருப்பதாகவும், மகள் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பேராசிரியர் வகுப்பில் கண்டித்ததால்'... 'மாணவன் எடுத்த விபரீத முடிவு'!
- ‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’
- 'சம்பாதிச்ச காசெல்லாம் குடிக்கே போச்சு'...'வேலையும் போச்சு'...சென்னை ஐ.டி ஊழியர் எடுத்த முடிவு!
- ‘குடும்பத்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று’.. தங்க வைத்து.. ‘தந்தை செய்த நடுங்க வைக்கும் காரியம்..’
- ‘அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்’.. தம்பி செய்த காரியத்தால்.. ‘கூட்டத்தில் இருந்தவர் கதறியழுத பரிதாபம்..’
- ‘யாரையும் கிட்ட நெருங்க விடல’.. ‘உயிரிழந்த எஜமானிக்கு காவலாக நின்ற நாய்’ கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்..!
- ‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- ‘தாயுடன் சண்டை’... ‘18 வயதான மகள் எடுத்த விபரீத முடிவு’... 'கண்ணிமைக்கும் நேரத்தில்'... 'பதறவைத்த வீடியோ'!
- ‘வினையில் முடிந்த விளையாட்டு..’ வீட்டில் தனியாக இருந்த.. ‘சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..’
- ‘கல்லூரியில் தாய் அளித்த புகாரால்’... ‘மகன் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறிப்போன குடும்பம்’!