என்னை 'பாலியல்' வன்புணர்வு 'செய்துவிட்டார்' மனைவி புகார்... தண்டனையை 'ரத்து' செய்த ஐகோர்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவி சிறுமியாக இருந்தபோது கணவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகத் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றைப் பிறபித்துள்ளது.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மனைவி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில், “சுப்பிரமணியன் என்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டார்” என்றும், “பெற்றோர் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்த பின் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்கிறார்” என்றும் புகார் அளித்திருந்தார்.
இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருப்பத்தூர் மகளிர் காவல் துறையினர் சுப்பிரமணியனைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணியனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு விசாரணை நடத்தியது.
விசாரணையின்போது சுப்பிரமணியன் மீது பாலியல் புகார் அளித்திருக்கும் அதே நேரத்தில் அவர் மனைவி, புரிந்துணர்வு விவாகரத்து கோரி கிழ்க் கோர்ட்டில் விண்ணப்பித்திருப்பது சென்னை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. அதேபோல், சுப்பிரமணியனும் அவரது மனைவியும் 18 வயதுக்கு பிறகே புரிந்துணர்வோடு உடல் உறவு வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டது.
இதனால், சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
பொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... !
தொடர்புடைய செய்திகள்
- 'அப்படி என்ன சொல்லிட்டேன்'... 'எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா'?... கதறி துடித்த தந்தை!
- ‘தங்கச்சி மயங்கி கிடக்கா, பீரோ உடஞ்சிருக்கு’!.. ‘மகனுக்காக நாடகமாடிய குடும்பம்’!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- ‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘மளமளவென’ பரவிய தீயால்... ‘நிமிடங்களில்’ நடந்து முடிந்த பயங்கரம்... ‘குழந்தைகள்’ உட்பட ‘9 பேர்’ பலியான சோகம்...
- ‘கல்யாணமாகி‘ 2 வாரம் தான்... அதுக்குள்ள எப்படி?... ‘மாமியாரின்’ வார்த்தையால்... கலங்கிய ‘இளம் பெண்’!
- ‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..
- ‘சகோதர - சகோதரி முறை என எதிர்த்த குடும்பத்தினர்’.. ‘காதலர்கள் செய்த அதிர்ச்சி காரியம்’..
- ‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- ‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘2 நிமிடத்தில்’.. ‘இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்’.. ‘ஒரே நாளில் மாறிய வாழ்க்கை’..