வாய்ப்பேயில்ல.. எப்படி நீங்க இருக்கீங்கன்னு, அப்பாகிட்ட அன்னைக்கே Doctor கேட்டாரு.. மயில்சாமி மகன் சொன்னது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது அதிகாலையில் கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவரை மருத்துவமனை அழைத்து சென்ற சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது மறைவு பலரை வாட்டியும் வருகிறது.
சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இல்லை என்ற சூழலிலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் இல்லாத மயில்சாமியின் மறைவு பற்றி பலரும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், மயில்சாமியின் மகனான யுவன், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தந்தையின் மரணம் குறித்தும், அதற்கு முன்பு அவருடனான பிணைப்பு குறித்தும் ஏராளாமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மயில்சாமிக்கு இதற்கு முன்பு ஹார்ட் அட்டாக் வந்தது பற்றி பேசிய மகன் யுவன், "டிசம்பர் 3 ஆம் தேதி அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. அன்னைக்கு திருவண்ணாமலை தீபம், ஆறு மணிக்கு பங்க்ஷன். இவருக்கு ஒரு நாலரை மணியில இருந்து நெஞ்சு வலி இருக்கு.
இந்த நேரத்துல எப்படி இப்ப நான் வெளியே போவேன் அப்படின்னு சொல்லிட்டு 7 மணி வரைக்கும் அது ஏதோ தூங்காம வேலை பாத்ததுனால வந்த வலின்னு நெனச்சு அப்படியே உட்கார்ந்து இருக்காரு. அது ஏதோ சாதாரண வலின்னு நினைச்சுட்டு அண்ணாமலையாரே அண்ணாமலையாரேன்னு வேலை செஞ்சுட்டு இருந்துருக்காரு.
ஏழு மணிக்கு மேல ரொம்ப முடியலன்னு சொல்லிட்டு இவரே ஆட்டோ புடிச்சு அங்க எங்க அண்ணாவோட ஹாஸ்பிடல் இருக்கு அங்க போய் அட்மிட் ஆயிட்டாரு. அன்னைக்கு திருவண்ணாமலை ஊரே கூட்டமா தான் இருந்துச்சு. அப்பாவோட முகத்த காமிச்சு போலீஸ்கிட்ட ஹாஸ்பிடல் போறேன் சொல்லி தான் எல்லா பேரிகேட்டையும் எடுக்க சொல்லி ஹாஸ்பிடல் போனாரு.
அப்பாவா இருந்ததுனால தான் அன்னைக்கே தப்பிச்சாரு. ஹாஸ்பிடல் போனதுக்கப்புறம் அண்ணன் செக் பண்ணிட்டு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு அப்படின்னு சொன்னாரு. அங்க இருந்து அப்புறம் ராமச்சந்திரா ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தப்போ டாக்டர் பாத்துட்டு எப்படி நீங்க இருக்கீங்கன்னு தான் அவரு கேட்டாரு, வாய்ப்பேயில்லை" என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "10 நாள் முன்னாடி பாக்குறப்போ மூச்சு எறைக்குதுன்னு சொன்னான்".. மயில்சாமி பத்தி மனோபாலா சொன்ன தகவல்!!
- ரஜினி பாலபிஷேகம் செய்யணும்ன்னு மயில்சாமி ஆசைப்பட்ட சிவன் கோவில்.. அவரு உருகி வழிபட்ட ஆலயத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா?
- Mayilsamy : "அன்னைக்கு நைட் எனக்கு அட்டாக் வந்துச்சு.. பிறந்த நாள், திருமண நாள் தெரியும். இறப்பு நாள் மட்டும் யாருக்கும் தெரியாது.!" - இறப்புக்கு முன் பேசிய மயில்சாமி..
- Mayilsamy : "மயில்சாமி அழைப்பின்பேரில் வாசிச்சேன்... ஃபேமிலிய டிராப் பண்ணிட்டு அடுத்த கோயிலுக்கு போலாம்னு சொன்னார்.." - இறப்புக்கு முன்வரை நடந்தது என்ன.? உடைக்கும் டிரம்ஸ் சிவமணி.!
- "என் அண்ணன், 10 நாளுக்கு ஒருமுறை போன் பேசுவார்".. மயில்சாமி மறைவு.. வேதனையில் உதயநிதி
- “இறப்புக்கு சிலமணி நேரம் முன்பு நடிகர் மயில்சாமி என்னுடன் சிவராத்திரி நிகழ்வில் இருந்தார்.. அதிர்ச்சியா இருக்கு.!” - டிரம்ஸ் சிவமணி உருக்கம்.! Mayilsamy