"வதந்தியை பரப்பாதீங்க, நிஜத்துல இதான் நடந்துச்சு".. மயில்சாமி மரணம் பற்றிய கருத்து.. மகன் சொன்ன உண்மை!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் மயில்சாமி, 57 வயதில் உயிரிழந்த சம்பவம், சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, மயில்சாமி மரணம் நடந்தது குறித்து சில வதந்திகள் பரவி வருவதாக தெரிகிறது. அப்படி இருக்கையில், இது பற்றி மயில்சாமியின் மகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 3 வருசமா வீட்டை விட்டு வெளிய வராத பெண்.. பக்கத்து வீட்டுல தனியா இருக்கும் கணவர்.. VIDEO CALL-ல தான் பேசுவாங்களா?".. திடுக் பின்னணி!!

தந்தையின் மரணம் குறித்து வெளியாகி வரும் வதந்தி குறித்து மகன் பேசுகையில், "அப்பாவோட இறப்பு பற்றி ஒரு Clarity ஆன நியூஸ் இல்ல. ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு விதமா பேசுறாங்க. நிறைய பேர் சில வீடியோஸ் எல்லாம் பாத்துட்டு என்னப்பா இப்படி எல்லாம் பேசணும்னு போன் பண்ணி கேக்குறாங்க. நடந்தது என்னன்னு நான் சொல்றேன், நான்தான் கூட இருந்தேன்.

டப்பிங் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தாரு. அப்புறம் கோவிலுக்கு போகலாம்ன்னு மேகநாதேஸ்வரர் சிவன் கோயிலுக்கு நான், அப்பா, அம்மா எல்லாரும் போனோம். அங்க சிவமணி சார்கிட்ட போய் அப்பா பேசிட்டு இருந்தாரு. அப்புறம் சிவமணி சார் 11:00 மணிக்கெல்லாம் வந்து நல்லா மியூசிக்ன்னு ரொம்ப ஜாலியா மனுஷன் இருந்தாரு. ரெண்டே முக்கால் மணிக்கு முடிச்சிட்டு இன்னொரு கோவில் போலாமான்னு பேசிட்டு இருந்தப்போ அப்பா சொல்லும்போது இல்ல, நீங்க இவ்ளோ நேரம் முழிக்க வேணாம், வீட்டுக்கு போயிடுங்கன்னு சிவமணி சார் சொன்னாரு. அப்பா ஹார்ட் பேஷண்ட்ல்ல. சரின்னு வீட்டுக்கு கிளம்பியாச்சு வர்ற வழியில நல்லா பேசிட்டு தான் வந்தோம். ரொம்ப சந்தோஷமா நல்லா தான் இருந்தாரு. வீட்டுக்கு வந்து பசிக்குதுபா ஏதாவது சாப்பிடலாமான்னு கேட்டாரு. அதுக்கப்புறம் சமைச்சு, அப்பா, அம்மா, நான் எல்லாம் சாப்பிட்டோம்.

அவர் கொஞ்ச நேரம் நியூஸ் பாத்துட்டு இருந்தாரு. சாப்பிட்ட பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிட்டது நெஞ்சிலே நிக்குது அப்படின்னு சொன்னாரு. ஹாட் வாட்டர் எடுத்துக் கொடுத்தேன், குடிச்சிட்டு படுத்தாரு. திருப்பி எந்திரிச்சு வந்தவரு எனக்கு டைஜஸ்ட் ஆகலன்னு பேசிட்டு இருந்தாரு. அப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அம்மா வந்து இந்த மாதிரி அப்பாக்கு மூச்சு விட முடியலன்னு சொல்லி கூப்பிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால முடியல, மூச்சுவிட கஷ்டமா இருக்குன்னு அப்பா சொன்னாரு.

அப்புறம் ஹாஸ்பிடல் போலாம்ன்னு எமர்ஜென்சிக்காக பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு கார்ல போனோம். ஜங்ஷன் போகும்போது அப்பா என் மேல சாஞ்சிட்டாரு. எனக்கு கார் ஓட்டவும் முடியலன்னு என்ன பண்றதுன்னு தெரியாம பக்கத்துல ஒரு ஆட்டோ புடிச்சு அந்த ஹாஸ்பிடலுக்கு போனோம். அங்க என்னடான்னா ஆல்ரெடி அப்பா இறந்துட்டாங்க அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சி, ஏதாவது கோமான்னு இருந்தா கூட சிபிஆர் எதாவது பண்ணி, காப்பாத்த வைக்கலாம் ஒன்னுமே ஆகலைன்னு இருந்தேன்.

அப்புறமா ராமச்சந்திரா ஹாஸ்பிடலுக்கு போனதும் அப்பா இறந்துட்டாங்க அப்படின்னு சொன்னாங்க. இதுதான் நியூஸ், அதுக்கப்புறம் நாங்க இங்க கிளம்பி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். மிச்ச வேலைகள் அதுக்கப்புறம் இங்க வந்து நடந்துச்சு.

ஆளுக்கு ஒன்னா போட்டுட்டு இருக்காங்க, டீக்கடையில் நிக்கும் போது மயக்கம் போட்டு விழுந்துட்டாருன்றாங்க. இன்னொருத்தவங்க திருவண்ணாமலைல இருக்கும்போது அங்கே இது ஆயிட்டாங்க அப்படின்னு போடுறாங்க. சில பேர் சாமியை கும்பிடும் போது அங்கேயே விழுந்துட்டாருன்றாங்க. இப்ப நான் சொன்னது தான் நியூஸ். இனிமே போடுறதா இருந்தா இதை ஃபாலோ பண்ணி போடுங்க" என தந்தை மயில்சாமி மறைவு பற்றிய வதந்திக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also Read | வாய்ப்பேயில்ல.. எப்படி நீங்க இருக்கீங்கன்னு, அப்பாகிட்ட அன்னைக்கே Doctor கேட்டாரு.. மயில்சாமி மகன் சொன்னது என்ன?

MAYILSAMY, MAYILSAMY SON ABOUT RUMOURS, FATHER DEATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்