"48 வருஷம் ஒண்ணா வாழ்ந்துட்டோம், இப்போ.." கணவர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில்.. மனைவிக்கும் நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயிலாடுதுறை பகுதியில், கணவர் ஒருவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அவரது மனைவிக்கும் நேர்ந்த துயரம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கீழ காலனி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருக்கு வயது 74. இவரது மனைவியின் பெயர் தமிழரசி (வயது 68).

குணசீலன் மற்றும் தமிழரசி தம்பதியருக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே மிகவும் சிறப்பாக திருமணத்தையும் அவரது பெற்றோர் முடித்து வைத்தனர்.

மகன் மற்றும் மகள்கள் ஆகியோர் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வந்த நிலையில், கணவன் மனைவியான குணசீலன் மற்றும் தமிழரசி ஆகியோர், தங்களின் பூர்வீக வீட்டில், மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், வயதின் காரணமாக குணசீலனுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று (26.07.2022) அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்  உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

48 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த கணவரின் இழப்பு காரணமாக, துடிதுடித்து போயுள்ளார் மனைவி தமிழரசி. துக்கம் தாங்காமல், தொடர்ந்து வேதனையில் இருந்த தமிழரசி திடீரென அங்கே மயங்கி விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தமிழரசியும் கணவர் இறந்த அதிர்ச்சியில் இறந்து போனதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, குணசீலன் பிரிவால் கலங்கி போன குடும்பத்தினர், தற்போது தமிழரசியின் மறைவால் இன்னும் சோகம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் அக்கிராமத்திலுள்ள மக்கள் ஒன்றாக சேர்ந்து, அந்த தம்பதியருக்கு இறுதிச் சடங்குகளையும் மேற்கொண்டனர். இதன் பின்னர், ஒரே இடத்தில் இருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

48 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த குணசீலன் - தமிழரசி தம்பதி, சாவில் கூட பிரியாமல் இருந்த சம்பவம், அந்த கிராம மக்கள் அனைவரையும்  சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

HUSBAND, WIFE, VILLAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்