‘என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’!.. 40 வருஷம் வெளிநாட்டில் வேலை.. சொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்பத்துக்காக வெளிநாட்டில் 40 வருடமாக உழைத்த முதியவரை சொத்துக்காக வீட்டை விட்டு வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவரான நாகராஜன். இவரது மனைவி குமரி.இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். நாகராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இதன்மூலம் மாடி வீடு, வணிக வளாகம் என 2 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் குடும்பத்துக்காக 40 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்த நாகராஜன் முதுமை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்களது பெயரில் மாற்றி தரவேண்டும் என அவரது மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் நாகராஜன் தனது சொத்துக்களை எழுதி தர மறுத்துள்ளார். அதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடமாக சரியாக உணவு, தண்ணீர் இல்லாமல் சாலையில் திரிவதாக நாகராஜன் கண்கலங்க தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
News Credits: Thanthi TV
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘4 பேருக்காக வந்த விமானம்’.. வாடகை எவ்ளோனு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.. மிரளவைத்த தொழிலதிபர்..!
- “வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! .. எங்களுக்கு இந்த 2 கடமை இருக்கு”! - வேதா இல்லம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு.. நெகிழ்ச்சியில் ஜெ.தீபா!
- ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!
- ரகசிய காதலுக்கு தண்டனை!.. ஆடைகளை களைந்து... உடலை சேதப்படுத்தி... உறவினர்கள் வெறியாட்டம்!.. பதபதைக்க வைக்கும் கோரம்!
- 'தம் அடிச்சா கொளுத்திட்டு செத்துருவேன்... ' 'எதிர்பார்க்கவே இல்ல டக்குன்னு தீ என்னோட...' ஒரே ஒரு சத்தியத்தால் சின்னா பின்னமான குடும்பம்...!
- "என் சாமி... என் அக்கா... என் பக்கத்துலயே இருக்கும்!".. நொறுங்கிப்போன குடும்பம்!.. சரமாரி கேள்விக்கு பதில் என்ன?.. நெஞ்சை ரணமாக்கும் ஜெயஸ்ரீ தங்கையின் கதறல்!
- 'கர்ப்பமான காதல் மனைவி'... 'ஆசபட்டத வாங்கி கொடுக்க முடியலியே'...'ஒரு நிமிடத்தில் உருக்குலைந்த குடும்பம்'... சென்னையில் நடந்த சோகம்!
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நேர்ந்த சோகம்.. ‘ஒருவர் பலி’.. இரவு சாப்பிட்ட உணவு காரணமா?.. அதிர்ச்சி சம்பவம்..!
- மருந்து வாங்க போனவருக்கு ‘இப்டியா’ நடக்கணும்..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...