இரவு நேரத்தில்.. வேகமாக வந்த வாகனங்கள்.. "சரசரவென இளம்பெண் வீட்டிற்குள் புகுந்து.." 15 பேர் கொண்ட கும்பலால் பதறிய மயிலாடுதுறை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயிலாடுதுறை பகுதியில் நள்ளிரவு நேரத்தில், 15 பேர் கொண்ட கும்பல் செய்த காரியம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | செஸ் ஒலிம்பியாட்: ஆட்டத்தில் கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி வீராங்கனை நடாஷா.!

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பகுதியில் கஞ்சமேட்டு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். 34 வயதாகும் இவர், மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸ் அருகே அமைந்துள்ள மயிலம்மன் நகரை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, விக்னேஸ்வரன் நடவடிக்கை பிடிக்காமல் இருந்து வந்த அந்த இளம்பெண், அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அந்த பெண் விலகிச் சென்றாலும், தொடர்ந்து பின் தொடர்ந்தது மட்டுமில்லாமல், காதலிப்பதாக கூறி பெண்ணின் வீட்டிற்கு சென்று, விக்னேஸ்வரன் தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்ததால், அந்த இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, மயிலாடுதுறை போலீசில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இரு தரப்பினரையும் அழைத்த போலீசார், இனிமேல் அந்த இளம் பெண்ணை தொந்தரவு செய்யக் கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனாலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அந்த இளம் பெண்ணை கடத்துவதற்காகவும் விக்னேஸ்வரன் முற்பட்டு, பின்னர் அதிலிருந்து அந்த பெண் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், மீண்டும் விக்னேஸ்வரன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, விக்னேஸ்வரன் மீது, பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகளை பதிந்து போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், நேற்று இரவு (02.08.2022) அந்தப் பெண் வீட்டிற்கு, ஸ்கார்பியோ மற்றும் சில இருசக்கர வாகனங்களில், மொத்தம் 15 பேருடன் விக்னேஸ்வரன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. வந்தது மட்டுமில்லாமல், பெண்ணின் வீட்டின் கதவை உடைத்து, அவரின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணை அவர்கள் தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளனர். வாசல் நெடுக, அந்த இளம் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கத்திக்கொண்டே வந்த நிலையில், அது எதனையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணை தூக்கி காரில் கடத்திச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வீட்டிலிருந்து சிசிடிவி காட்சிகளையும் பார்வையிட்டனர்.  இதன் பின்னர், விக்னேஸ்வரன் கார், கொள்ளிடம் செக் போஸ்ட்டை கடந்து விழுப்புரம் நோக்கி செல்வதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் விக்கிரவாண்டி செக் போஸ்டில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பெண்ணை பாதுகாப்பாக மீட்ட போலீசார், விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை முதல் கட்டமாக கைது செய்த விசாரித்து வருகின்றனர். மீதமுள்ள சுமார் 12 பேர் யார் என்பதையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read | கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை.. ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்த இளைஞர்.. "பக்கத்துல போன சமயத்துல.." பாதியிலேயே முடிந்த பயணம்

MAYILADUTHURAI, YOUTHS, WOMAN HOUSE NIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்