விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ... 'மாஸ்டர்' படத்துக்கு அடித்த ஜாக்பாட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கலுக்கு வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரத் தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஓடிடி வெளியீடு என்று பலமுறை வதந்திகள் வெளியாகி வந்தன. இறுதியாக, திரையரங்குகளில்தான் படம் வெளியாக முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் திரையரங்குகளில் சுமார் 80% 'மாஸ்டர்' படத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், திரையரங்க உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் 'மாஸ்டர்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலித்து அனுமதி அளிக்கும். தியேட்டரில் 'மாஸ்டர்' படத்தை வெளியிடும் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தேர்தல் நடத்தி வெற்றி பெற்றவர்கள்தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர். ஓடிடியில் படம் வெளியிடுவது உகந்தது கிடையாது எனத் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இரவு விருந்துக்கு செல்லாததால்... நடிகை வித்யா பாலன் பட ஷூட்டிங்கை நிறுத்திய அமைச்சர்???" - பரபரப்பு குற்றச்சாட்டுக்கு ம.பி. அமைச்சர் அதிரடி விளக்கம்!!!
- 'விஜய் ஃபேன்ஸ்-க்கு ஒரு ஹாட் அப்டேட்...' 'மாஸ்டர்' திரைப்படம் எதில் வெளியாகிறது...? - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...!
- 'இதனால கொரோனா பரவாதுனு சொன்னா கேக்கணும்!'... ‘ப்ரஸ்’ மீட்டில் நிரூபிக்க.. ‘Ex மினிஸ்டர்’ செய்த ‘வைரல்’ காரியம்!
- சூப்பருங்கண்ணா..! காதுக்கு தகவல் வந்த அடுத்த நிமிடமே நேரில் சென்று உதவிய விஜய் ரசிகர்கள்.. குவியும் பாராட்டு..!
- 'இவ்ளோதானா.. வாங்க.. நான் உங்க கனவை நிறைவேத்துறேன்!'... தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த வனத்துறை அமைச்சர்! நெகிழ்ச்சி சம்பவம்!
- VIDEO: "விஜய் தன் அப்பாவுக்கு எதிராகவே... கோபத்தில் பொங்கி எழ... உண்மையான காரணம் என்ன???" - போட்டுடைக்கும் பத்திரிகையாளர்!!!
- “விஜய் ஒரு விஷ வலையில் மாட்டியிருக்கார் .. என் புள்ளைய நான் காப்பாத்தணும்!!”.. ‘தந்தையிடம் விஜய் பேசினாரா? நடந்தது என்ன?’.. - SA சந்திரசேகர் ‘Exclusive’ பேட்டி! வீடியோ!
- "ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது..!".. அரசியல் கட்சி தொடர்பாக மனம் திறந்த நடிகர் விஜய்!!.. ‘மின்னல் வேகத்தில் வெளியான’ அதிகாரப்பூர்வ அறிக்கை!
- அரசியல் கட்சியாக மாறுகிறது விஜய் மக்கள் இயக்கம்!.. வரும் தேர்தலில் போட்டியா?.. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!
- நியூசிலாந்து அமைச்சரவையில்... 'ஒரு சென்னைப் பெண்'!.. யார் இந்த 'பிரியங்கா ராதாகிருஷ்ணன்'?.. வியப்பூட்டும் தகவல்!