முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, ரூ. 3 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது, மார்டின் குழுமம்!

கொரோனா 2வது அலை தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், தமிழக அரசு எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், Martin Group-ன் நிறுவனர் மற்றும் தலைவரான சான்டியாகோ மார்டின் அவர்கள், Martin Charitable Trust மூலமாக ரூ. 3 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.

கடந்த மே 17ம் தேதி அன்று, Martin Charitable Trust-ன் Managing Trustee ஆன AKS Dr. Leema Rose Martin அவர்களும், Martin Group இயக்குநரான Daisy Martin அவர்களும், Martin Group-ன் COO ஆன George Marshall அவர்களும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூ. 3 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர்.

இதில், 100 units oxygen concentrators, ரூ.1.25 கோடி மதிப்புள்ள life saving medicines, 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 400 Oxygen cylinders, 1000 Oximeters, 12500 N95 மாஸ்க்குகள், 10000 Hand Sanitizers, 5000 Tooth paste மற்றும் 5000 Tooth brush என நிவாரண பொருட்களை வழங்கியதோடு, தமிழக அரசு சிறந்த முறையில் கொரோனாவை கையாண்டு வருவதாகவும், இது போன்ற பேரிடர் காலங்களில் எப்போதும் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் Martin Group துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், Martin Group தமிழக மக்களுக்கு பல்வேறு உதவிகளை தன்னுடைய CSR activities மூலம் செய்து வருகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம், Martin Charitable Trust மூலமாக ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி மாணவர்களோடு இணைந்து 72 மணி நேரத்தில் 34 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்த பிப்ரவரி மாதம், APJ Abdul Kalam foundation மற்றும் 800 அரசுப் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து 100 femto செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தனர்.

இதற்கிடையே, கஜா புயலின் போது, மீட்புப் பணிகளுக்காக தமிழக அரசுக்கு சுமார் ரூ. 5 கோடி நிதி வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்