'டிக்டாக் தோழியுடன் மாயமானதாகக் கூறப்பட்ட பெண் போலீஸீல் ஆஜர்'.. 'சந்தேகக் கணவர் என குற்றச்சாட்டு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேவகோட்டையைச் சேர்ந்த வினிதாவுக்கும் சானாவூரணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோவுக்கும் இடையே கடந்த ஜனவடியில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் சிவகங்கையில் வீடு பார்த்து தனிக்குடித்தனம் சென்றனர்.

அதன் பின்னர் ஆரோக்கிய லியோ சிங்கப் பூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். இதனிடையே வீட்டில் தனிமையில் பொழுதைக் கழித்த வினிதா, டிக்டாக்கில் திருவரூரைச் சேர்ந்த அபி என்பவருடன் டிக்டாக்கில் நெருங்கிப் பழகியதோடு அளவுகடந்த அன்பைப் பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழலில்தான் இந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, மனைவியை காணும் ஆசையில் லியோ தாயகம் திரும்பியுள்ளார். ஆனால்  ‘இவர் எதற்கு இப்போது வந்தார்’ என்பதுபோல, ஏனோதானோவென வினோதினி நடந்துகொண்டதாக லியோ உணர்ந்துள்ளார்.

சந்தேகித்த லியோ வினோதினியின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது வினோவும், அபியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் கண்டு அதிர்ந்துள்ளார். உடனே வினோதினியை அவரது தாயார் வீட்டுக்குக் கூட்டிச் சென்று, அங்கு மொத்த குடும்பமும் வினோதினியிடம் அபியை மறந்துவிடும்படி புத்திமதி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தனது கணவர் அணிவித்த 20 பவுன் தங்கச் சங்கிலியை தனது தோழி அபியிடம் கொடுத்துவிட்டதாகவும், தனது அக்காளின் 25 பவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டு மாயமாகியதாகவும் வினோதினியின் தாயார் அருள் ஜெயராணி புகார் அளித்தார். 

அதன் பேரில் தேடப்பட்டு வந்த வினிதா, சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, தான் 6 பவுன் நகை மற்றும் பிரேஸ்லெட்டை எடுத்துக்கொண்டு, தன் கணவர் தன்னை சந்தேகப்பட்டு அடித்ததால், தனது மற்றொரு தோழி சரண்யாவின் வீட்டுக்குச் சென்றதாகவும், தன் நகைகளை அடகுவைத்துதான் தன் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பியதாகவும், அந்த கணவரே தன்னையும் தனது டிக்டாக் தோழியையும் சந்தேகப்பட்டு அடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் தற்போது பரவிவரும் தவறான செய்திகளால் தனது டிக்டாக் தோழிக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதால் போலீஸில் ஆஜராகி உண்மையைச் சொல்வதாகவும் வினிதா தெரிவித்துள்ளார். 

TIKTOK, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்