"இது மனிதாபிமானமற்ற செயல்.‌! திருமணம் உடல் சார்ந்தது மட்டும் இல்ல".. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் என்பது உடல் இன்பத்துக்கானது மட்டும் அல்ல என்றும் அதன் முக்கிய பொறுப்பு சந்ததியை உருவாக்குவது தான் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

தந்தையின் கண்காணிப்பில் இருக்கும் தனது இரண்டு மகன்களையும் பார்க்க தன்னை அனுமதிக்க வேண்டும் என தாய் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு குறித்து பேசிய நீதிபதி பெற்றோர்கள் பிரிவினால் குழந்தைகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவதாக வருத்தம் தெரிவித்தார்.

பிரிவு

வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பெண் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார். தனது கணவர் வீட்டின் எதிரே தனது பெற்றோருடன் வசித்துவரும் அவர், கணவர் வேலைக்கு சென்ற பிறகு தனது மகன்களை கவனித்து வந்திருக்கிறார். இருப்பினும், தன்னை பற்றி மகன்களிடத்தில் தவறாக பேசி, மகன்களை தன்னிடம் இருந்து அந்நியப்படுத்த கணவர் முயற்சிப்பதாக அந்த பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனது மகன்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருமணம்

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இதுகுறித்து பேசுகையில்,"திருமணம் என்பது உடல் இன்பத்துக்கானது மட்டும் அல்ல. அதன் முக்கிய பொறுப்பு சந்ததிகளை உருவாக்குவதும் அதன்மூலம் திருமண சங்கிலியை வலுவடைய செய்வதும்தான் என திருமணமானவர்களை இந்த கோர்ட் வலியுறுத்த விரும்புகிறது. ஒரு குழந்தையை பெற்றோருக்கு எதிராக திருப்புவது, குழந்தையை தனக்கு எதிராக திருப்புவதாகும். பெற்றோரின் புறக்கணிப்பு மனிதாபிமானமற்றது மற்றும் அது குழந்தைக்கு ஏற்படும் அச்சுறுத்தலாகும். உண்மையில், வெறுப்பு என்பது ஒரு குழந்தைக்கு அவரது தாய்/தந்தைக்கு எதிராக இயல்பாக வரும் உணர்ச்சி அல்ல, அது குழந்தைகள் நம்பும் நபரால் கற்பிக்கப்படுகிறது" என்றார்.

மேலும், "இந்த வழக்கில் கணவரின் நடத்தையைப் பார்க்கும்போது, ​​குழந்தைகள் இனி பாதுகாப்பான காவலில் இருப்பதாக கருத முடியாது" எனக்கூறிய நீதிபதி மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இரு குழந்தைகளும் தங்களது தாயிடத்தில் இருக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

COURT, PARENTS, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்