'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கமிஷனர் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து அவதூறு தகவலை பரப்பியுள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, இதன்காரணமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சின்ன கலைவாணர் என்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் எவ்வித பலனின்றி மறைந்தார்.
அதற்கு முந்தைய நாள், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது. அந்த கருத்து மிகவும் தவறானது என மருத்துவ ஆய்வாளர்கள் கண்டித்தனர். இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நான் அளித்த பெட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டுள்ளார், உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'விட்டா போதும்டா சாமின்னு...' 'தெறிச்சு ஓடிய பொதுமக்கள்’... 'ஏதும் செய்ய முடியாமல்... முழிபிதுங்கி நின்ற ரயில்வே ஊழியர்கள்...! - வைரல் வீடியோ
- 'கரப்பான் பூச்சியால ஒரு மனுசனுக்கு...' 'இப்படியெல்லாம் கூடவா பிரச்சனை வரும்...' - மூணு வருசமா போராடி இப்போ கோர்ட் வரைக்கும் போய்டுச்சு...!
- ‘மிரட்டும் கொரோனா பாதிப்பு’!.. இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘முழு ஊரடங்கு’.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- 'இரவு நேரத்தில் முழு ஊரடங்கா'?... 'சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா'?... 'அரசு என்ன சொல்ல போகிறது'... எதிர்பார்ப்பில் மக்கள்!
- 'இத' தாண்டி 'கொரோனா' எப்படி வருதுன்னு...' 'ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...' 'கார்ல இருந்து மீட்டிங் வரைக்கும்...' - அரசு அதிகாரியின் தற்காப்பு ப்ளான்...!
- 'கொரோனா கையை மீறி சென்று விட்டது'... 'உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு தகவல்'... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
- ‘எந்த அறிகுறியும் இல்லாம கொரோனா பரவிட்டு இருக்கு’!.. ‘அதனால இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே ஹாஸ்பிட்டல் போங்க’.. சென்னை மாநகராட்சி ஆணையர் ‘முக்கிய’ தகவல்..!
- ரொம்ப சிம்பிள்...! 'எடுக்க வேண்டியது ஒரே ஒரு போட்டோ...' உங்களுக்கு 'அது' இருக்கா இல்லையான்னு... 'அடுத்த செகண்டே தெரிஞ்சிடும்...' - எப்படிங்க இது சாத்தியம்...?
- ‘1 மணிநேரத்துக்குள் 45 ஆம்புலன்ஸ்’!.. கொரோனா நோயாளிகளுடன் மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நின்ற வண்டிகள்.. மிரண்டு போன மாநிலம்..!
- 'மக்களே உஷார்'...'எல்லாம் நம்ம கையில தான் இருக்கு'... 'இல்ல, அந்த கசப்பு மருந்தை கொடுத்துதான் ஆகணும்'... தமிழக அரசு எச்சரிக்கை!