‘தொல்லை கொடுத்த’... ‘எலிகளை விரட்ட சென்ற இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்’... ‘பதறிய தாய்’... ‘போராடி மீட்ட மருத்துவர்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எலியை விரட்ட சென்ற இளைஞருக்கு எலியை குத்தும் சுழிக்கி ஆயுதம் நெஞ்சில் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். 20 வயதான இவரது  ஏராளமான  வீட்டை சுற்றி அதிகளவு விவசாய நிலங்கள் உள்ளது. இதனால் இவர்கள் வீட்டை சுற்றி எலி தொல்லை இருந்துள்ளது.  எலிகள் வீடுகளைச் சுற்றி பள்ளம் தோண்டி தொல்லை கொடுத்து வந்துள்ளன. இதனால் அவ்வப்போது எலிகளை அவர்கள் விரட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு 5-க்கும் மேற்பட்ட எலிகள் வீட்டை சுற்றி அதிக சத்தத்துடன் பள்ளம் தோண்ட ஆரம்பித்துள்ளது.

அப்போது விஜய் எலிகளை விரட்ட இருட்டில் சென்றுள்ளார். அப்போது தவறுதலாக கீழே விழுந்த போது மீன் தூண்டில் போல இருக்கும் எலியை குத்தும் சுழிக்கி, அவரது வலது மார்பில் பாய்ந்துள்ளது. இதனால் வலியால் துடித்த அவரை, இரவு 12 மணிக்கு காரைக்குடி மருத்துவமனையில் அவரது தாயார் சேர்த்துள்ளார். நீண்ட நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர், உயிர் போகும் வலியில் இருந்த விஜயை மருத்தவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

எக்ஸ்ரே உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த சுழிக்கியை மருத்துவர்கள் எடுத்ததும் விஜயின் தாயார் நெகிழ்ந்து போயுள்ளார். அதன்பின்னர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் தனது மகன் நலமாக உள்ளதை அறிந்ததும் தான் அந்த தாயாருக்கு உயிர் வந்துள்ளது.

Credits: Vikatan

ACCIDENT, KARAIKUDI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்