'டைம் ஆச்சுல'... சீக்கிரம் 'தூங்குப்பா'ன்னு' சொன்ன அம்மா'...ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூங்காமல் இருந்த மகனை, தாய் தூங்க சொன்னதால் கல்லை போட்டு மகன் கொலை செய்ய முயற்சித்த கொடூரம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம்,பார்வதி தம்பதி. இவர்களுக்கு சுரேஷ்குமார், செந்தில்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் செந்தில்குமாருக்கு திருமணமான நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருடைய மனைவியை கடந்த 8 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். செந்தில் குமாரை அவருடைய தாய் பார்வதி கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு செந்தில்குமார் வீட்டில் வெகுநேரமாக தூங்காமல் இருந்துள்ளார். இதனால் தாய் பார்வதி 'ரொம்ப நேரம் ஆச்சு தூங்குப்பா' என கூறியுள்ளார். இதனால் செந்தில்குமாருக்கும் அவருடைய தாய் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தாய் பார்வதி கோபித்து கொண்டு தூங்க சென்றுள்ளார். ஆனால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த செந்தில்குமார், தாய் பார்வதி அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து வீட்டின் அருகே இருந்த கல்லை தூக்கி தலையில் போட்டு உள்ளார்.

இதில் படுகாயமடைந்த பார்வதியை மீட்ட அவரது உறவினர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூங்க சொன்னதற்காக பெற்ற மகனே தாயை கொல்ல முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MADURAI, MOTHER, SON, ATTEMPT MURDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்