‘பேஸ்புக்கில் ஃப்ரண்ட் ரிக்வஸ்ட்டை ஏற்காத முன்னாள் முதலாளி!’ - ஆத்திரமடைந்த வாலிபர் செய்த ‘மிரள வைக்கும்’ காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிறிஸ்துமஸ் தினத்தன்று North Dakota பகுதியைச் சேர்ந்த 29 வயதான Caleb Burczyk என்பவர்  தனது முன்னாள் முதலாளியான Burczyk என்பவருக்கு,  பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பியிருக்கிறார்.

ஆனால் 2 நாட்களுக்கு மேலாக அவரது பிரண்ட் ரிக்வஸ்ட்க்கு, அவரது முதலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அந்த நபர், தனது முன்னாள் முதலாளிக்கு பல அச்சுறுத்தலான மெசேஜ்களை அனுப்பத் தொடங்கியுள்ளார்.

அவர் தனது முன்னாள் முதலாளிக்கு அனுப்பிய அந்த மெசேஜ்களில், தனது பிரண்ட் ரிக்வஸ்ட்டை ஏற்கவும் இல்லை என்றால், அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதுடன், அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து, வேறு சமூக ஊடக கணக்குகளில் இருந்தும் Burczyk, மீண்டும் தனது முன்னாள் முதலாளிக்கு  தனது ரிக்வஸ்ட் ஏற்கப்படாவிட்டால் சிக்கல் ஏற்படும் என மெசேஜ் அனுப்பி மிரட்டியுள்ளார். 

அத்துடன், அவரது முன்னாள் முதலாளியின் வீட்டிற்கு வேறொரு ஒரு புதிய கதவு தேவைப்படும் எனவும் Burczyk அதில் ஒரு குறிப்பிட்டு எழுதியிருந்தார். சொன்னது போலவே, முதலாளியின் வீட்டுக்கு சென்று, அவரது வீட்டின் முன் கதவை உடைத்து அட்டகாசம் செய்துள்ளார் Burczyk.  பின்னர், சி.சி.டி.வி காட்சிகளை (CCTV footage) ஆய்வு செய்ததை வைத்து, தனது முன்னாள் முதலாளியின் வீட்டுக் கதவை Burczyk உடைத்தது அம்பலமாகியது.

இதனைத் தொடர்ந்து, கொலை குற்றச்சாட்டுக்காக  Burczyk கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சோஷியல் மீடியாக்கள் உண்மையாகவே மக்களை ஒன்று சேர்க்கவும், ஒத்த எண்ண ஓட்டங்கள் கொண்டவர்களிடையே ஆரோக்கியமான பரிமாற்றங்கள் நிகழவும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஃபேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட்டை ஏற்காததற்காக தனது முன்னாள் முதலாளியின் வீட்டின் கதவை ஒரு நபர்  உடைத்தும்,, கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்