3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட 'பிரேத' பரிசோதனை... 'அம்மா'வுக்கு ஒடம்பு சரியில்ல... ஆனாலும் நம்பிக்கை இருக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தற்போது உறவினர்கள் அப்பா-மகன் இருவரின் உடல்களையும் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சிறைக்காவலில் இருந்த போது இறந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடல்களின் மீதான பிரேத பரிசோதனை  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு ஆய்வுக்கு பின் இரவு 8.10 மணியளவில் தொடங்கிய பிரதே பரிசோதனை 11.35 மணிக்கு நிறைவு பெற்றது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் உடல்களை பெற்றுக்கொள்வதாக சகோதரி பெர்சி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், ''அம்மாவின் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் தந்தை, சகோதரன் உடல்களை பெறுகிறோம். உயர்நீதிமன்ற கிளை நேரடியாக விசாரிப்பதால் நீதி கிடைக்கும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது'' என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்