Video: 'இதுகளுக்கு நடுவுல உக்காந்துகிட்டு ஜாலியா பேசிட்டு இருந்த மனுசன்'.. நொடிப் பொழுதில் நடந்த களேபரம்.. வைரல் ஆகும் 'தரமான' வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பல பெரிய மலைப் பாம்புகளால் சூழப்பட்ட பகுதியில், அத்தனை பெரிய பாம்புகளுக்கு நடுவே ஒருவர் அமர்ந்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

கலிபோர்னியாவின் ஊர்வன வகை மிருகக்காட்சி சாலையில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில் மிருகக்காட்சி சாலையின் நிறுவனர் ஜே ப்ரூவர் பாம்புகளுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அவர் ஜாலியாக மலைப்பாம்புகளுக்கு நடுவே அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால் அவர் எதற்கும் தயங்காதவர் என தெரிகிறது.

அனைத்து விதமான சைஸ்களுடன் மற்றும் விதவிதமான வண்ணங்களுடன் கூடிய மலைப் பாம்புகள் அவரைச் சுற்றி சறுக்கிக் கொண்டிருக்கின்றன. அவரோ அவைகளின் மொத்த எடைக்கு அடியில் சிக்கியுள்ளார்.

இதையெல்லாம் விட பதறவைத்த சம்பவமாக வீடியோவில் சில வினாடிகள் கழித்து கொத்தாக சில மலைப் பாம்புகள் பொத்தென ப்ரூவரின் தலையில் விழுவதை கண முடியும்.

ALSO READ: “இல்ல.. எப்படி முடியும்?” - ‘ஒழுங்கா எட்டு கூட போடத் தெரியாத பேயா?’ .. ‘வைரலாகும் வீடியோ’ .. கமெண்ட்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்