மனைவி சொன்ன ஒரு வார்த்தைக்காக ‘தாம்பத்தியத்தை’ தள்ளிப்போட்ட கணவன்.. 2 வருசம் கழிச்சு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த கணவன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவி திருநங்கை என்பது தெரியவந்து, நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அன்புச்செல்விக்கும், கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அன்புச்செல்வி தடகள வீராங்கனையாக இருந்துள்ளார்.
அதனால் மேற்படிப்பு படித்து, விளையாட்டு பிரிவில் அரசு வேலை வாங்கும் வரை தாம்பத்யம் வேண்டாமென்று கணவர் செல்வத்திடம் அன்புச்செல்வி கூறியுள்ளார். மனைவியின் ஆசைக்கு செல்வமும் ஆதரவு கொடுத்துள்ளார். இதன்பின்னர் 2 ஆண்டுகள் தனது மேற்படிப்பை அன்புச்செல்வி முடித்துள்ளார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்ததால், மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்ள செல்வம் முயன்றுள்ளார்.
அப்போது தனது மனைவி திருநங்கை என்பது தெரியவந்து செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அன்புச்செல்வியின் பெற்றோரிடத்தில் இதுகுறித்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் செல்வத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த செல்வம், கடந்த 2015-ம் ஆண்டு திட்டக்குடி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விருதாச்சலம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார்.
இதனிடையே நடந்த மருத்துவ பரிசோதனையில் அன்புச்செல்வி திருநங்கை என்பது தெரியவந்தது. இதனால் செல்வத்தின் மனைவி அன்புச்செல்வி, அவரது பெற்றோர் அசோகன்-செல்லம்மாள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பளித்தார். திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பும்ரா' குறித்து 'சஞ்சனா' பகிர்ந்திருந்த பழைய 'டீவீட்'... 'கல்யாண' பேச்சுக்கு நடுவுல.. இப்போ இந்த பதிவும் செம 'வைரல்'!!
- 'செய்தியை வாசித்து முடித்ததும் அழுத செய்தி வாசிப்பாளர்'... 'பதறிய ஊழியர்கள்'... ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நெகிழ வைத்த சம்பவம்!
- 'மாப்பிள்ளை ஆகப்போகும் பும்ரா...' அப்போ பொண்ணு யாருங்க...? அங்க தான் ரசிகர்களுக்கு செம டிவிஸ்ட்...!
- பள்ளி ஆசிரியரை ‘மறுமணம்’ செய்த அமேசான் சிஇஒ-வின் முன்னாள் மனைவி.. இதுக்கு அவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா..?
- 'நாலு பேரையுமே சின்சியரா லவ் பண்றேன்...' 'யார கல்யாணம் பண்றதுன்னே தெரியல...' 'இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கு, எட்றா அத...' - இப்படியும் ஒரு தீர்ப்பா...!
- 'ஜெகஜோராக நடந்த திருமணம்'... 'திடீரென கூட்டத்திலிருந்து எழும்பிய பெண்ணை பார்த்ததும் பதறிய மாப்பிள்ளை'... இரு வீட்டாருக்கும் காத்திருந்த ட்விஸ்ட்!
- முடியாது சார்...! 'கண்டிப்பா டைவர்ஸ் வேணும்...' 'கல்யாணத்துக்கு முன்னாடியும் சொல்லல...' 'அப்புறமும் சொல்லல...' - ஒரு மனுஷனுக்கு இப்படி எல்லாம் கூடவா சோதனை வரும்...!
- ‘என் வாழ்க்கையோட சிறந்த நாள்’!.. ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. குவியும் வாழ்த்து..!
- ‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’!.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல?’.. மண்டபத்தில் காத்திருந்த ‘மணமகன்’ வீட்டாருக்கு தெரியவந்த அதிர்ச்சி..!
- இதுக்காக தான் திடீர்னு ‘லீவ்’ எடுத்தாரா?!.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு?.. தீயாய் பரவும் தகவல்..!