நின்னு... நிதானமா... "எங்கப்பாவ கொலை செஞ்சவர"... மகன் செய்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர், ராதாகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் ஒரு மெக்கானிக் ஷாப்பின் வெளியே நின்றுகொண்டிருந்த போது, கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்த மர்மக் கும்பல், ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிக் கொடுரமாக கொலை செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஸ்கார்ப்பியோ காரில் தப்பித்துச் சென்ற கொலையாளிகளைப் பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். நீண்ட நேர சேஸிங்கிற்குப் பிறகு கொலையாளிகள் காரை மடக்கிய போலீஸார், காரில் இருந்த கொலையாளிகளை வளைத்துப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் போலீஸாரிடம் கூறியதாவது, "2013-ம் ஆண்டு நிலப் பிரச்சனை தொடர்பாக சேகர் என்பவரை, ராதாகிருஷ்ணன் ஊர் மத்தியில் வைத்து அடித்தே கொலை செய்துள்ளார். அவர்மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்ததால், மக்கள் பயந்துகொண்டு புகார் அளிக்கவில்லை. சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், சேகர் கொலை வழக்கிலிருந்து ராதாகிருஷ்ணன் விடுதலையானார். அப்பாவின் கொலைக்கு நீதி கிடைக்காததாலும் கொலை செய்த ராதாகிருஷ்ணனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்றும் உயிரிழந்த சேகரின் மகன் அரவிந்த் எங்களை அணுகினார்.
`எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் அப்பாவைக் கொன்னவனோட கதையை முடிச்சிடுங்க’ என முதலில் ஒன்றரை லட்ச ரூபாயைக் கொடுத்தார். அந்தப் பணத்தோடு எங்களிடமிருந்த பணத்தையும் சேர்த்து முதலில் கார் ஒன்றை வாங்கினோம். அதையடுத்து முதல் தவணையான 2 லட்ச ரூபாயைக் கொடுத்தார். அதன்பிறகு ஈரோடு வந்து கடந்த ஒரு மாதமாக ராதாகிருஷ்ணனை ஃபாலோ செய்தோம். கொலை செய்ய இரண்டு முறை ஸ்கெட்ச் போட்டோம். ஒருசில இடையூறுகளால் அது மிஸ் ஆனது. சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தோம். மூன்றாவது ஸ்கெட்ச்சில் வகையாகச் சிக்கிக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கூலிப்படையை ஏவிய அரவிந்தை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணத்துக்கு முன்தினம் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு..! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!
- பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
- 'பெற்ற தாயை கொலை செய்த மகள்!'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன?'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...
- ‘மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்த நண்பன்’.. ‘ப்ளான் பண்ணி கொலை செய்த கணவர்’.. அதிரவைத்த வாக்குமூலம்..!
- ‘சுத்தியலால்’ தாக்கி... 50 கிலோ ‘உப்பை’ கொட்டி... ‘சினிமா’ பாணியில் இளைஞர்கள் செய்த ‘கொடூரம்’... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- கொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...
- ‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
- 'அட்சதை போட வேண்டிய 'அப்பா'வே நாசம் பண்ணிட்டாரே'... 'கதறிய காதலி'... காதலன் எடுத்த அதிரடி!
- ‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...
- ‘கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொலை’.. பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்..!