‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல!’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரில் தினசரி மார்க்கெட் பிள்ளையாட் கோவிலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). கட்டிடங்களுக்கு செண்ட்ரிக் வேலை பார்த்து கொடுக்கும் இவரது மனைவி வசந்தா(45)வுக்கும் இவருக்கும் 21 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பக் கஷ்டம் காரணமாக தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள ராமச்சந்திரன் என்கிற ராம்ஜெத்மலானியை சந்தித்து உதவி கோரியுள்ளார் வசந்தா. அப்போது ராமச்சந்திரனோ, அவரிடம், ‘பரிகாரம் செய்தால் குடும்பக் கஷ்டம் எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறி வசந்தாவின் போன் நம்பரை பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து, வசந்தாவுக்கு அடிக்கடி போன் செய்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் இதை அறிந்த கிருஷ்ணன் இதை கண்டித்துள்ளார். அதன் பிறகு ஒருநாள் கிருஷ்ணனின் வீட்டுக்கு போதையில் வந்த ராமச்சந்திரன், அங்கிருந்த கிருஷ்ணனின் மகனுடன் கிருஷ்ணனுடனும் தகராறு செய்துவிட்டு, தான் வைத்திருந்த கத்தி கொண்டு கிருஷ்ணனை குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.
அதன் பிறகு ராசிபுரம் போலீஸார் ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தபோதுதான், ராமச்சந்திரன் வசந்தாவிடம் மாந்திரீகத்தின் மூலம் குடும்பக் கஷ்டத்தைப் போக்குவதாகக் கூறி, மெல்ல மெல்ல கள்ள உறவு வைத்துக் கொண்டிருந்ததும், அடிக்கடி வசந்தாவின் வீட்டுக்கு கிருஷ்ணன் இல்லாத நேரமாக பார்த்து ராமச்சந்திரன் வந்து போனதும் தெரியவந்தது.
மேலும் ராமச்சந்திரன் வசந்தாவிடம் குழைந்து பேசி, வசந்தாவின் மகளையும் வசப்படுத்த நினைத்ததும், அதற்கு சம்மதிக்காத வசந்தாவிடம் பேச கிருஷ்ணனின் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன், அங்கு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனைக் கொன்றுவிட்டு தப்பியோடியதும் தெரியவந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்ற செய்திகள்
Video: 'ஹெலிகாப்டர்' ஷாட் அடிச்சு பாத்துருப்பீங்க... 'ரொமாண்டிக்' டான்ஸ் ஆடி... பாத்து இருக்கீங்களா?
தொடர்புடைய செய்திகள்
- 'பொண்ணு வேலைக்கு போகுதுன்னு நினைச்சோம்'... 'காட்டில் நடந்த பயங்கரம்'... அதிரவைக்கும் தடயங்கள்!
- ‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி!’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!’.. ‘மிரள வைக்கும்’ காரணம்!
- ‘விட்டுச்சென்ற மனைவி!’.. ‘வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடிய கணவர்‘.. புதுவருஷ நாளில் நேர்ந்த விபரீதம்!
- கல்யாணமாகி 2 வருஷம் தான்... கிணற்றில் இருந்து... சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்... அதிர்ந்துபோன பெற்றோர்!
- பரிகாரம் செய்வதாகக் கூறி... வீட்டுக்கு வந்த ஜோசியரால்... மனைவிக்கு நிகழ்ந்த தொந்தரவு... தட்டிக் கேட்ட கணவருக்கு நடந்த விபரீதம்!
- படத்துல ‘ஹீரோயின்’ ஆக்கறேன்னு சொன்னாரு... ‘சென்னை’ கொலையில் பெண்ணின் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- ‘3-வது திருமணத்துக்கு இடையூறு’.. ‘பாறாங்கல் மூடிய நிலையில் குழந்தை சடலம்’.. காதலருடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்..!
- ‘மின்கம்பத்தில் பழுது பார்த்த நபர்’.. ‘ஏணியில் ஏறி வெட்டி சாய்த்த கும்பல்’.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!
- ‘தகாத’ உறவை துண்டித்தும் ‘தொந்தரவு’... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியம்... சென்னையில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- ‘வீட்டுக்குள் தேங்காய் சிறட்டையால் எரிக்கப்பட்ட இன்ஜினீயர்’!.. ‘மரத்தால் வந்த பிரச்சனை’!.. வெளியான பகீர் தகவல்..!