'சொன்னா கேக்க மாட்ட?'.. மனைவியுடன் கள்ள உறவு.. நண்பனுக்கு 'இப்படி ஒரு தண்டனை' கொடுத்த கணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டியைச் சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பெரியசாமி. 43 வயதான பெரியசாமி முன்னாள் ராணுவ வீரர். திருமணமான இவரும் இவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், பெரியசாமி, தனது தந்தை ராமமூர்த்தியுடன் வசித்து வருகிறார்.
இந்த சூழலில்தான், திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகரைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும்(40) பெரியசாமிக்கும் இடையே தொழில் ரீதியான அறிமுகம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாயினர். இப்படி போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் பெரியசாமி கடத்தப்பட்டார்.
விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி சரண்யாவுக்கும்(32) அவரது நண்பர் பெரியசாமிக்கும் கள்ள உறவு இருந்ததை கண்கூட பார்த்துவிட்ட செந்தில்குமார், இதனை கண்டித்துள்ளார். ஆனாலும் பெரியசாமியும் சரண்யாவும் அடிக்கடி போச்சம்பள்ளிக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமாருக்கும் பெரியசாமிக்கும் இடையே தகராறு உண்டானது. அதன் பின்னர் தனது கூட்டாளிகளின் உதவியுடன் பெரியசாமியைக் கடத்திய செந்தில்குமார், பெரியசாமியின் உயிர் உறுப்பினை சிதைத்து, கொன்று புதைத்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த போலீஸார் பெரியசாமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செந்தில்குமாரையும் அவரது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து’.. ‘3 பேர் பலி; 34 பேர் படுகாயம்’..
- ‘3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை’.. சிக்கிய உருக்கமான கடிதம்..!
- 'பிரசவ வார்டில் துடித்துக்கொண்டிருந்த மனைவி'..'கண்ணீரை வரவழைத்த கணவரது செயல்'!
- 'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ!
- 'பொறியியல் வேலைக்கு போகாம'.. 'விவசாயம் செய்ற கணவர்'.. மனைவி எடுத்த விபரீத முடிவு!
- ‘ஒரு மாத குழந்தையுடன் வந்த இளம் தம்பதி’.. ‘ஓடும் ரயிலில் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'நானெல்லாம் என் கணவரை இப்படி 6 மணி நேரம் நிக்க வெக்க மாட்டேன்'.. அனல் தெறிக்கும் கமண்ட்ஸ்.. வைரலாகும் கணவர்!
- ‘உங்க பொண்ணு’... ‘பதறிப் போய் பார்த்த பெற்றோருக்கு’... ‘மருமகனால் காத்திருந்த அதிர்ச்சி’!
- ‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ?’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'!
- 'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்!