‘ஏமாத்துனது 300 ரூபாய்!’.. ‘37 வருஷம் சிறை தண்டனை!’.. மூதாட்டி வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காய்கறி விற்கும் மூதாட்டியிடம் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி, காய்கறி வாங்கிய இளைஞர் ஒருவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த இளைஞரை சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியை சேர்ந்தவர் பிரேமா என்கிற மூதாட்டி. இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரத்தில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் காஞ்சிபுரம் சேதுராயர் தெருவைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் இந்த மூதாட்டியிடம் 300 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கியுள்ளார். ஆனால் அந்த மூதாட்டியிடம் சென்று 300 ரூபாய்க்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் போன பிறகுதான் மூதாட்டிக்கு அந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாதவை என்றும், அவை கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து மனம் நொந்து போன அந்த மூதாட்டி, தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்தி உள்ளார். ஆனாலும் அந்த இளைஞர் மூதாட்டியை ஏமாற்றியதில் திருப்தி அடையவில்லை.
அடுத்த வாரம் சந்தையிலும் மீண்டும் அதே மாதிரி வந்த அந்த இளைஞர் அதேபோல், 300 ரூபாய் கொடுத்து காய்கறி வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரை மடக்கிப்பிடித்து சண்டையிட்ட மூதாட்டி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தார். இதனை அடுத்து அவர்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது அந்த இளைஞர் மூதாட்டியிடம் கலர் ஜெராக்ஸ் நோட்டுக்களை கொடுத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். அதன்பின் சுதர்சன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரித்த போலீசார், சுதர்சனிடம் இருந்த கலர் ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து மூதாட்டியை ஏமாற்றியது, கள்ளநோட்டு அச்சடித்தது, அந்தப் பணத்தை புழக்கத்தில் விட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை சற்றும் எதிர்பாராத சுதர்சன், தீர்ப்பைக் கேட்டதும் இடி விழுந்தது போல் எதுவும் பேசாமல் தரையில் உட்கார்ந்து விட்டார். சிறைக்கு செல்லும் முன் தன் மகளை சந்தித்த சுதர்சன்,‘எங்கப்பா போறீங்க?’ என்று மகள் கேட்ட கேள்விக்கு ‘அப்பா ஊசி போட்டுக்க ஹாஸ்பிடல் போறேன்’ என்று சமாதானம் சொன்னார். எனினும் 300 ரூபாய் மோசடிக்காக, சுதர்சனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விஷயம் காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ரூ.100 கோடியா..?”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்!”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க? - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்!”
- ‘அத்திவரதர் தரிசனம்’!.. ‘சென்னையை பின்னுக்கு தள்ளிய காஞ்சி’.. அடேங்கப்பா 2 மாசத்துல மட்டும் இவ்வளவு பேரா..?
- ‘பாம்புக்கு பாலாபிஷேகம்’!.. ‘10 கலர்ல முகத்தை காட்டுவேன்’!.. பகீர் கிளப்பும் காஞ்சிபுரம் பெண் சாமியார் பின்னணி..!
- 'கார் விழுந்துருக்கு'.. பணமும் வாங்கிக்கலாம்'.. 'ஆசையை' தூண்டும் 'வாய்ஸ்'.. அதுக்கப்புறம் போட்ட கண்டிஷன்!.. 'கரூர்' இளைஞருக்கு வந்த போன்!
- ‘கழுத்தில் நல்லபாம்பு’!.. ‘கையில் சூலாயுதம்’!.. வைரலான யூடியூப் வீடியோ..! சிக்கிய காஞ்சிபுரம் பெண் சாமியார்..!
- 'டப்புனு கதவ அடைச்சாங்க!'... 'அங்க இருந்த 10 ஆண்களும்' எங்கள!.. நிதி நிறுவனம் மீது பெண்கள் பரபரப்பு புகார்!
- ‘தண்டனை கன்ஃபார்ம்!’.. 'தீர்ப்புக்கு முதல் நாள்'.. பாலியல் குற்றவாளி எடுத்த 'விபரீத முடிவால்' நேர்ந்த சம்பவம்!
- ‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- 'உங்க ATM கார்டை புதுப்பிக்கணும்.. OTP நம்பரை சொல்லுங்கே!'.. 'போலீஸ்காரரையே ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் அபேஸ்!'.. பரபரப்பு சம்பவம்!
- 'உங்க கணவருக்கு தோஷம் இருக்கு!'.. குடுகுடுப்பை கும்பலிடம் பணம், நகையை பறிகொடுத்த பட்டதாரி பெண்!