மகனுடைய பள்ளிக்கூட பையை பொக்கிஷம் போல சுமந்து செல்லும் தந்தை .. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது மகனின் பள்ளிக்கூட பையை சுமந்து செல்லும் ஒரு தந்தையின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read  | ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த நபர்.. நீதிபதி போட்ட வித்தியாசமான கண்டிஷன்.. இது புதுசா இருக்கே..!

கல்வி

ஒவ்வொரு அப்பாவிற்கும் தனது மகனை டாக்டர், எஞ்சினியர் என கல்வி கற்றவர்களாக  மாற்றிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். தான் படித்த காலத்தில் சந்தித்த கஷ்டங்கள், வலிகள் தனது குழந்தைகளுக்கு வரக்கூடாது என நினைக்காதே தந்தையர்களை இருக்கமுடியாது. தாயின் அன்பு எப்போதுமே பரந்த வெளியில் பேசப்படும் போது குழந்தைகளைப் பற்றிய தந்தைகளின் காதல் ஒரு எழுதப்படாத கவிதை போலவே இன்றும் இருந்து வருகிறது. தற்போது வைரலாகும் இந்த வீடியோவும் ஒரு விதத்தில் ஒரு கவிதை போலவே இருக்கிறது.

வேறுபாடு

இந்த வீடியோவில் கசங்கிய சட்டை, லுங்கி, கழுத்தில் துண்டு என ஒரு சாதாரணமாக இருக்கும் அவர் தன்னுடைய வலது கையில் பள்ளிக்கூட பையை சுமந்தபடி நடந்து வருகிறார். அவருக்கு பின்னால் அவரது மகன் பள்ளி சீருடையுடன் ஐடி கார்டு அணிந்து நடந்து வருகிறார். இப்படி தன்னுடைய நிலையை குறித்து கவலைகொள்ளாமல் தன்னுடைய மகனை மட்டும் நினைத்தபடி, அவனது எதிர்காலத்தை சிந்தித்தபடி அந்த தந்தை நடந்து செல்கிறார். தனக்கு கிடைக்காத கல்வி தனது மகனுக்காவது கிடைத்திடவேண்டும் என நினைக்கும் தந்தைகளின் நடை அப்படித்தான் இருக்கும்.

வைரல் வீடியோ

வறுமை, கஷ்டம் என ஆயிரம் தடைகள் இருந்த போதும் தன்னுடைய மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் கோடிக்கணக்கான அப்பாக்களும் இந்த மனிதரும் ஒருவர். மகனின் பள்ளிக்கூட பையை ஒரு பொக்கிஷம் போல கருதி பிடித்திருக்கும் அவருடைய பெயரோ, அவருடைய மகனுடைய பெயரோ தெரியவில்லை. ஆனால் இந்த சிறிய வீடியோ கணப்பொழுதில் பலருக்கும் தங்களது தந்தையை நினைவு படுத்தி விடுகிறது. இதனாலேயே இணைய தளத்தில் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

MAN, MAN HOLD HIS SON SCHOOL BAG, தந்தை, பள்ளிக்கூட பை, கல்வி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்