VIDEO : 'குடை' கொண்டு வந்தா தான் 'அது' கிடைக்கும்... 'அறிவித்த' மாவட்டம்... 'ஒத்திகை' பார்த்து தயாரான நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான பகுதிகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அந்த மாவட்டத்தில் நாளை திறக்கும் மதுக்கடைகளில் மது வாங்க வருபவர்கள், குடைபிடித்து வந்தால் தான் மது விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் ஒன்றில் தடுப்புகள் அமைத்து ஆறடிக்கு ஒருவர் நிற்பது போல் கட்டைகள் கட்டி வட்டம் வரைந்து  முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, குடையை கையில் பிடித்தபடி எப்படி மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும் என்பதை குடையை வைத்துக் கொண்டு நபர் ஒருவர் ஒத்திகை பார்த்த வீடியோ ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, சமூக இடைவெளியை சரிவர கடைபிடிக்க வேண்டும் என்றும், அடையாள அட்டை ஒன்றை நபர்கள் கொண்டு செல்ல வேண்டும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்