வாகனங்களை நிறுத்தி "வழிப்பறி" ... மோசடியில் ஈடுபட்ட நபரை ... லாவகமாக தூக்கிய "போலீஸ்"!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை அருகே அருண்பிரகாஷ் என்ற ஆசாமி, தனது பைக்கில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி போலீசார் இல்லாத பகுதியாக தேர்ந்தெடுத்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். வாகனங்களில் சென்ற சிலரைத் தடுத்து நிறுத்திய அருண்பிரகாஷ், போலீசார் தொனியில் மிரட்டி சுமார் 7,000 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறித்துள்ளார். அதே போல காய்கறி வியாபாரத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் சுமார் 5,000 ரூபாய் வரை மிரட்டிப் பறித்துள்ளார். அது மட்டுமில்லாது தன்னை காவல் நிலையத்தில் வந்து பார்க்க வேண்டும் எனவும் கூறி அனுப்பியுள்ளார்.
போலீஸ் என்ற பெயரில் போலியாக வழிப்பறி செய்த அருண்பிரகாஷை போலீசார் அவரது பைக்கின் நம்பரை வைத்து தேட ஆரம்பித்தனர். திருமலை பகுதியில் பைக்கில் இருந்த அருண்பிரகாஷை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்த போது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற அருண், தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் மருத்துவமனை கொண்டு சென்று மாவு கட்டு போட்ட பின்னர் போலீசார் அருண்பிரகாஷை கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். முன்னதாக அருண் பிரகாஷ் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பலவேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில்' மேலும் '14 நாட்கள்' ஊரடங்கை 'நீட்டிக்க' பரிந்துரை... 'முதல்வருடன்' ஆலோசனை நடத்திய 'நிபுணர்' குழு தகவல்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...
- தமிழகத்தில் 'இன்று' மட்டும் புதிதாக '96 பேருக்கு' கொரோனா... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
- ‘சட்டென மாறி ஜில்லிட வைத்த தமிழக வானிலை’... ‘இடி, மின்னலுடன் சென்னையில் மழை’... ‘சொன்னது போலவே கோடை வெயில் மாறியது எதனால் தெரியுமா?’...
- கொரோனா 'பாசிட்டிவ்' ... ஆனால் 'மருத்துவமனையில்' இருந்து எஸ்கேப்? ... தேடுதல் வேட்டையில் 'போலீசார்' ... அச்சத்தில் 'மக்கள்'!
- 'அப்பாவ அடக்கம் பண்ணக்கூட வழியில்ல' ... தவித்து தனிமையில் நின்ற மகள் ... ஊர் மக்கள் இணைந்து எடுத்த முடிவு!
- 'நமக்காக வேல பாக்குறவங்க கூட' ... 'கொண்டாடணும்னு நெனச்சேன்' ... 'பிறந்தநாளை' சிறப்பாக கொண்டாடிய 'சிறுவன்'!
- தமிழகத்தின் அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை திரும்பப் பெற்றது தமிழக அரசு!
- 'கவர்ன்மெண்ட் 'தடை' பண்ணியிருக்கு' ... 'நீங்க குழி தோண்டி விக்குறீங்களோ?' ... ஊரடங்கில் சட்டவிரோதமாக சிக்கிய மதுபாட்டில்கள்!!
- 'எனக்கு இப்போ குடிச்சே ஆகணும், இல்லன்னா' ... கிணற்றிற்குள் குதித்து அடம்பிடித்த நபர் ... இறுதியில் நடந்தது என்ன?