"கொரோனா" வந்து போனா என்ன ... "கரண்ட்" அடிச்சு போனா என்ன ... 'குடும்ப' தகராறால் 'கடுப்பாகி' இளைஞர் செய்த "விபரீத" செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை மாவட்டம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ஜீவா. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளுண்டு. குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக வீட்டின் அருகேயுள்ள மின்கோபுரம் ஒன்றின் மீது ஏறி தான் சாகப் போவதாக கூறி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக, ஊரடங்கின் காரணமாக மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளத்தனமாக மதுவை வாங்கி ஜீவா குடித்துள்ளதாக தெரிகிறது.

ஜீவா மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சி செய்வதை அறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ஊர் மக்களும் அதிகம் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 'கொரோனா வந்து செத்தாலும், கரண்ட் அடித்து செத்தாலும் ஒண்ணு தான்' என ஜீவா மேலிருந்து கூறி அங்குமிங்குமாக மின் கோபுரத்தின் மீது நடந்துளார் ஜீவா. அவரது மனைவி மற்றும் மகளும் பயத்தில் கதறிக் கொண்டே ஜீவாவை கீழே இறங்கி வரச் சொல்லி கெஞ்சியுள்ளனர்.

ஆனால் ஜீவா, எதையும் கேட்காமல் போதையின் காரணமாக தொடர்ந்து சாகப் போவதாக கூறி வந்துள்ளார். போதை தெளிந்ததன் பயனாக மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தாசில்தாரின் பேச்சைக் கேட்டு தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஜீவா கீழே இறங்கி வந்துள்ளார். தனது தையின் ஸ்தானத்தில் பேசியதாக கூறி தாசில்தார் காலில் விழுந்து அழுது புலம்பியுள்ளார் ஜீவா.

போதையின் காரணமாக நபர் ஒருவர் மின்கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்