'பணத்தை எப்போ வேணா சம்பாதிக்கலாம்', ஆனா ... அன்று 'மேனேஜர்' இன்று 'துப்புரவு தொழிலாளி' ... ஹைதராபாத் மேனேஜர் சொல்லும் நெகிழ்ச்சி கதை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையை சேர்ந்த நபர் ஒருவர் கோவை மாநகராட்சியின் துப்புரவுப் பணிக்காக தனது மேனேஜர் பதவியிலிருந்து விலகி துப்புரவாளராக மாறியுள்ளார் .

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த பணிகளுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் பி.இ, பி.டெக், பி.எஸ்.சி படித்த பட்டதாரிகள்  அதிகம் விண்ணப்பித்திருந்தனர்.

எம்.எஸ்.சி மாணவி மோனிகா என்பவர் துப்புரவுப் பணியில் சேர்ந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்து நிலையில், தற்போது ஹைதராபாத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரியான சையத், தனது மேனேஜர் பணியை விட்டு துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார்.

இது குறித்து சையத் கூறுகையில், 'கோவை தான் எனது சொந்த ஊரு. ஹைதராபாத்தில் ஒரு டேட்டா என்ட்ரி கம்பெனியில் மேனேஜராக கடந்த பத்து ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். சின்ன வயதில் இருந்து அரசு வேலை மீது ஈர்ப்பு இருந்தது. இங்கு எல்லா வேலையும் நல்ல வேலை தான். நோய் வரும்போது அதற்காக மருத்துவர்களிடம் சென்று காசு செலவு செய்கிறோம். அந்த நோயை தடுக்கும் மகத்தான வேலையை செய்வதால் பெருமையாக உள்ளது' என்றார்.

மேலும் தனது குடும்பம் குறித்து சையத் கூறுகையில், 'ஹைதராபாத்தில் இருக்கையில் மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே என் குடும்பத்தினரை பார்க்க முடியும். இப்போது தினமும் அவர்களுடன் பொழுதினை கழிக்கிறேன். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் உறவுகள் அப்படியல்ல' என்கிறார் சையத்.

CLEANER, HYDERABAD, GOVERNMENT JOB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்