'வெறித்தனமாக' ஓடிவந்த காட்டு யானை... பதற வைத்த சிசிடிவி காட்சிகள்... முதியவருக்கு நேர்ந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெறித்தனமாக ஓடிவந்த காட்டு யானையிடம் இருந்து நொடிப்பொழுதில் முதியவர் ஒருவர்  உயிர் தப்பிய சம்பவம் சிசிடிவி காட்சிகளாக வெளிவந்து பலரையும் பதறவைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளது கொலக்கொம்பை. இந்த ஊரிலும், இதனருகே உள்ள தூதூர்மட்டம் பகுதிகள் தொடங்கி பல இடங்களிலும் உணவுக்காக அலைந்து திரியும் காட்டு யானைகளை அவ்வப்போது வனத்துறையினர் கட்டுப்படுத்துவதோடு, மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இந்த பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களிடையே ஊடுருவிய காட்டு யானைகளி வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த 4 யானைகளில் ஒரு யானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியே வந்துள்ளது.

அதன் பின்னர், கொலக்கொம்பையில் ஒரு மழைச்சாலையில் ஆக்ரோஷமாக அந்த காட்டு யானை ஓடிவந்த வழியில், அதே சாலையில் எதிர்ப்புறமாக நடந்துவந்துகொண்டிருந்தார் முதியவர் அப்துல் காதர். யானை ஓடிவந்ததைப் பார்த்ததும் பதறியவர், செய்வதறியாமல், அருகில் இருந்த காம்பவுண்டு சுவரோடு சுவராக இறுக்க ஒட்டிக்கொண்டார்.

ஆனாலும், வந்த வேகத்தில் அவரைத் தாக்க முயன்ற இந்த காட்டு யானை, அவர் மீது இலேசாக தும்பிக்கை மட்டும் படும் அளவுக்கு தாக்கியுள்ளது. ஆனால் என்ன நினைத்ததோ தெரியவில்லை, மீண்டும் தலைதெறிக்க, தான் ஓடிக்கொண்டிருந்த திசையிலேயே மீண்டும் ஓடத் தொடங்கியது. காட்டு யானையிடம் இருந்து கணப் பொழுதில் தப்பித்த முதியவர் அப்துல் காதருக்கு நேர்ந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

ELEPHANT, BIZARRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்