‘மேட்டுப்பாளையம் விபத்து’!.. ‘இறந்த குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை’.. உருகவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து பலியான தனது குழந்தைகளின் கண்களை தானமாக வழங்கிய தந்தையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய  வைத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனால் வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியத்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியான தனது குழந்தைகளில் கண்களை தானமாக வழங்கிய தந்தையின் செயல் உருக வைத்துள்ளது. டீக்கடை தொழிலாளி செல்வராஜ். இவரது மகள் நிவேதா, மகன் ராமநாதன். செல்வராஜின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மனைவியின் தங்கை சிவகாமி குழந்தைகள் இருவரையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதன்று செல்வராஜ் டீக்கடையிலேயே தங்கியுள்ளார். காலையில்தான் வீடு இடிந்து விழுந்த சம்பவம் அவருக்கு தெரியவந்துள்ளது. இதில் செல்வராஜின் இரு பிள்ளைகளும் பரிதாபமாக இறந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து தனது மகள் மற்றும் மகன் கண்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தானமாக வழங்கியுள்ளார். குழந்தைகள், உறவினர்கள் என யாரும் இல்லாமல் அனாதையாக நிற்பதாக கண்கலங்க தெரிவித்துள்ளார்.

ACCIDENT, METTUPALAYAMTRAGEDY, METTUPALAYAM17DEATH, FATHER, EYES, DONATES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்