‘பதைபதைக்க வைத்த ஆட்டோ ரேஸ்’... ‘நொடியில்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டபோது, கன்டெய்னர் லாரி மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவைச் சேர்ந்தவர், 30 வயதான பிரபாகரன். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று காலை, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி, பலத்த காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், நண்பர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும், உடனடியாக போலீசாருக்கு தவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரபாகரனின் நண்பர்களிடம் எங்கே விபத்து நடந்தது என்பது குறித்து விசாரித்தபோது. முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், பிரபாகரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர், கடந்த புதன்கிழமையன்று காலை, போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை, மதுரவாயல் பைபாஸ் சாலையில். ஆட்டோ ரேசில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் நண்பர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட பிரபாகரன், ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் மீது மோதியதில், பலத்த காயம் அடைந்துள்ளார். போலீசுக்கு பயந்து இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து விட்டதாக நண்பர்கள் கூறியது தெரியவந்ததால், வில்லிவாக்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..
- 'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘குடும்பத்துடன் கோயிலுக்கு போனபோது’... ‘நொடியில் நடந்த கோர சம்பவம்’!
- Video: நீ 'போடவே' வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து 'சிதறும்' ஹெல்மெட்கள்!
- 'புகார் தந்தா, என் அம்மா திரும்பி வருவாங்களா?'.. லத்தியை வீசி எறிந்த போலீஸார்.. கணப்பொழுதில் நேர்ந்த சோகம்!
- ‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘பள்ளியில் மயங்கி விழுந்து’... ‘மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்'... 'அதிர்ச்சியடைந்த தோழிகள்'... 'கதறித்துடித்த பெற்றோர்'!
- 'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'!
- 'போலீஸ் நிற்கும்போதே'... 'நொடியில் நைஸாக'... 'முதியவர் பார்த்த வேலை’... ‘பதறிப்போன ஆட்டோ டிரைவர்’!
- ‘கோவிலுக்கு போனபோது’... '8 பேருக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'சோகத்தில் ஆழ்ந்த குடும்பங்கள்'!