'வெற்றிப் படிகட்டு!'.. '30 நிமிஷத்துல 33 புளோர்!'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்!’ .. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சைக்கிள் ஓட்டுவது அவ்வளவு கஷ்டம் இல்லை. என்றாலும் எதிர்க்காற்றில் சைக்கிளிங் செய்வதே சில நேரங்களில் கடினமனாக இருக்கும்.

மலைமேடுகளிலும், ஏற்றமான பகுதிகளிலும் சைக்கிள் ஓட்டுவதற்கு தனி பயிற்சியே தேவை. அந்த பாதைகளிலும் செல்வதற்கு ஒரு நெளிவு சுளிவு தேவைப்படுகிறது. ஆனால் 33 புளோர்கள் ஒருவர் சைக்கிளிலேயே ஏறிச் சென்று மாடிக்குச் சென்றுள்ளார் என்றால் நம்மால் நம்ப முடியுமா?

அதுவும் அநாயசமாக 30 நிமிடங்கள் என்கிற குறுகிய நேரத்தில் ஒருவர் சைக்கிளிலேயே 33 புளோர்களை கடந்திருக்கிறார். பிரான்சு தலைநகர் பாரீசில் தான் இப்படி இளைஞர் ஒருவர் 33 மாடி கட்டிடத்தை மலையேற்ற சைக்கிள் மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 33 தளங்களும், 768 படிக்கட்டுகளும் கொண்ட இந்த கட்டிடத்தின் தரைத்தள படிக்கட்டில் இருந்து மேல்தளத்தின் படிக்கட்டு வரை Aurelien Fontenoy என்பவர் சைக்கிள் மூலமாகவே ஏறி உள்ளார். இத்தனைக்கும் அவர் எந்த இடத்திலும் இடத்தில் காலை கீழே வைக்காமல் சைக்கிளை இயக்கியிருக்கிறார்.

பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் முயற்சியில் அவர் இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: “மொத்த வாழ்க்கையும் 44 நாள்ல...” - அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும் நடராஜன் பற்றி முன்னாள் வீரரின் 'வைரல்' பேட்டி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்