'AC-ல பணத்த போடுங்க.. நீங்க OLX ல பாத்த...'.. வடநாட்டு 'வாய்ஸ்க்கு' ஏமார்ந்த தமிழ்நாட்டு இளைஞர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரைச் சேர்ந்தவர் சஞ்சய். இவர் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் விலைக்கு பழைய ஷிஃப்ட் கார் ஒன்றை OLX செயலியில் பார்த்துள்ளார். 

உடனே சம்மந்தப்பட்ட நபரின் நம்பருக்கு போன் செய்து சஞ்சய் பேசும்போது, அந்த நபரின் பெயர் ராகேஷ்குமார் என்றும், மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரராக பணியாற்றுவதாகவும் அந்த நபர் கூறியதாக ராகேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.  அதன் பிறகு ராகேஷ் குமார் தனது வங்கிக் கணக்கில் பணம் போட்டால், உடனே செயலியில் பார்த்த அந்த காரை சஞ்சயின் வீட்டுக்கு டெலிவரி பண்ணுவதாகக் கூறி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார்.

முன்பணமாக 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை அந்த நபர் பெற்றுக்கொண்டுமுள்ளார்.  ஆனால் தாமதமாகவே, அந்த நபர் அனுப்பிய ஆதார் அட்டை போலி என்றும், தான் ஒரு வடமாநிலத்து இளைஞரால் ஏமாற்றப்பட்டதையும் சஞ்சய் உணர்ந்ததோடு, விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி அவர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

CHEATING, CAR, OLX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்