'வசதியான வீட்டு பொண்ணு'...'எப்படி எல்லாம் பிளான் போட்டு வச்சிருந்தேன்'...போதை மாமாவால் சிக்கிய இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு மருத்துவர் என பொய் சொல்லி, வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
வில்லிவாக்கம் வெங்கடேசன் நகரில் வசித்து வந்தவர் கார்த்திக். இவர் தினமும் காலையில் ஜி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட காரில், வெள்ளை அங்கியையும், ஸ்டெத்தஸ்கோப்பையும் எடுத்து கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை வழக்கமாக கண்ட அந்த பகுதி மக்கள் அவரை அரசு மருத்துவர் என எண்ணினார்கள்.
இந்நிலையில் கார்த்திக்கின் நடவடிக்கைகளை தினமும் கவனித்து வந்த வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தங்கள் வீட்டு பெண்ணை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணினார். இதையடுத்து கார்த்திக்கை சந்தித்த அவர், அவரது குடும்பம் பற்றி விசாரித்துள்ளார். அப்போது தனக்கு பெற்றோர் இல்லை என்று கூறிய கார்த்திக், உறவினர்கள் மட்டுமே இருப்பதாகவும், அரசு மருத்துவமனை ஒன்றில் தாம் பணிபுரிவதாகவும் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் நம்பிய பெண்ணின் குடும்பத்தினர் நல்ல பையனாக தெரிகிறாரே என மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் திருமண ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்தார்கள். இதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திக்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. வியாழக்கிழமை அன்று ரெட்டேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது.
அனைத்தும் நல்ல படியாக சென்று கொண்டிருப்பதாக எண்ணிய கார்த்திக்கிற்கு பிரச்சனை அவரது மாமா வடிவில் வந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு மது அருந்தி விட்டு வந்த கார்த்திக்கின் மாமா வரதட்சனை பணம் தொடர்பாக பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது போதையின் உச்சியில் இருந்த அவர், கார்த்திக்கே ஒரு பிச்சைக்காரன் என உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
மேற்கொண்டு விசாரித்த போது கார்த்திக்கின் வாய் குளறத் தொடங்கியது. அப்போது தான் பெண் வீட்டாருக்கு உண்மை புரிய அங்கிருந்தவர்கள் கார்த்திகை புரட்டி எடுத்து, மாதவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கார்த்திக்கின் சொந்த ஊர் கோவை என்பதும், உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு திருமணத்திற்கு வந்த பெரும்பாலானோர் போலிகள் என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே 8 மாதங்களுக்கு முன்பு வில்லிவாக்கம் வந்த கார்த்திக், அங்கு தன்னை அரசு மருத்துவர் போல் காட்டிக் கொண்டு வசதியான வீட்டுப் பெண்ணை மணம் முடிக்க திட்டம் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே கார்த்திக் இதற்கு முன்பு வேறு யாரையாவது ஏமாற்றி திருமணம் செய்துள்ளாரா அல்லது வேறு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளாரா என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் பின்புலம் தெரியாமல் எடுத்த முடிவு இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது.
மற்ற செய்திகள்
'டீன் ஏஜ் பொண்ண கடத்தி'...காப்பாத்த போன இளைஞர்...'நிர்வாணமாக ஓடிய சிறுமி'...நடுங்க வைக்கும் சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- 'அதுல எப்படி தற்கொலை பண்ண முடியும்'...'அங்க எப்படி காயம்?'...'ரீட்டா மரணத்தில் அதிரவைக்கும் சந்தேகங்கள்!
- ' அடக்கம் பண்ண காசு இல்ல'...'பர்சில் இருந்த பணத்தை கொடுத்த 'டிஸ்பி'...நெகிழவைக்கும் வீடியோ!
- 'இப்படியே இருந்தா கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்காது'.. போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு!
- ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!
- 'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா?...சென்னையில் பரபரப்பு!
- மகன்களுக்கு மட்டும்தான் சொத்தா..? அப்போ மகள்களுக்கு..? கணவன், மனைவி சண்டையில் நடந்த பயங்கரம்..!
- 'புதுசா கல்யாணம் ஆன பொண்ணு'...'ஒரே வீடியோல வைரல் ஹிட்'... 'என்ன செஞ்சாங்க'?... வைரல் வீடியோ!
- ‘புதிய மோட்டர் வாகன சட்டம்’.. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
- ‘போதையில் பயணமுங்க பாதையில் மரணமுங்க’.. சாலை பாதுகாப்பு குறித்து போலீஸ் பாடிய பாடல்..! வைரலாகும் வீடியோ..!
- 'பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்னு போன பொண்ணு'...'தவித்து நின்ற மணமகன்'...கடைசி நேரத்தில் நடந்த சோகம்!