ஊருக்கே இந்த 'வைரஸ்' ஆப்பு அடிச்சுதுல்ல... அத வச்சே அடுத்த 'ரவுண்டு' ஸ்டார்ட் பண்ணிருக்கேன்... பிரபலமாகும் கொரோனா 'பெட்டிகடை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய நீதிமன்றம் அருகே ஒரு உணவக கட்டிடம் ஒன்றின் அருகே சிறிய பெட்டிக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிக்கடைக்கு வைக்கப்பட்ட பெயர் தற்போது அந்த பகுதியில் பிரபலமாகி வருகிறது. காரணம் அந்த கடையின் பெயர் 'கொரோனா'.
இந்த கடைக்கு உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் பெயர் வைக்க காரணம் என்ன என்பது குறித்து கடையின் முதலாளி ரமணா கூறுகையில், 'கேரளா மாநிலத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வந்துள்ளேன். கொரோனா பரவல் காரணமாக கடையை அடைத்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் போக சொல்லி விட்டார்கள். சொந்த ஊருக்கு வந்த நிலையில் 80 நாட்களாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன்.
வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து வந்த நிலையில், அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றின் ஒரு பகுதியை பெட்டிக்கடையாக வைத்துக் கொள்ளலாமா என கேட்க அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். கொரோனா வைரஸ் காரணமாக தான் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தேன். அதனால் அதன் பெயரிலேயே துவங்கலாம் என முதலீடு செய்து கொரோனா பெயரை வைத்தேன். கடை வைத்து ஒரே வாரத்தில் ஊர் முழுவதும் சேதி தெரிந்து விட்டது. வியாபாரமும் பரவாயில்லை' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!
- 'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry"
- ‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- 'பிளாஸ்மா' செல்களில் உள்ள 'Y வடிவ' புரதம்... 'கொரோனா' சிகிச்சையில் 'புரட்சியை' உண்டாக்கும்... 'அமெரிக்க விஞ்ஞானிகளின்' புதிய கண்டுபிடிப்பு...
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்
- ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'மும்பையில்' மட்டும் '451 கொரோனா' நோயாளிகளின் 'இறப்பு மறைப்பு...' 'பலியானவர்களின்' எண்ணிக்கை 'அதிகம்...' 'வெளியான தகவலால் அதிர்ச்சி...'
- 'இறக்கமற்ற கொரோனா!.. இன்று மட்டும் 49 உயிர்களை பறித்துவிட்டது!'.. தமிழகத்தின் கொரோனா நிலவரம்