'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'இளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப் பட்ட சம்பவம், சென்னை மக்களை அதிரவைத்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருபவர் தேன்மொழி.ஈரோட்டை சேர்ந்த இவர் எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர், தேன்மொழியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.ஆனால் இவர்களது திருமணத்திற்கு தேன்மொழியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.இதனால் சுரேந்தருடன் பேசுவதை தேன்மொழி படிப்படியாக குறைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த சுரேந்தர்,விடுதிக்கு செல்ல காத்திருந்த தேன்மொழியினை சந்தித்து பேசியுள்ளார்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தேன்மொழிக்கு தாடை, கை விரல்களில் பலமாக வெட்டு விழுந்தது.இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தை கண்ட மக்கள்,அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
இதனிடையே தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன் பாய்ந்து சுரேந்தரும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேந்தர் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் சென்னை மக்களை அதிர செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை!
- 'அப்பாடா, நமக்கும் வாய்ப்பு இருக்கு!'... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- 'கத்தி குத்தில்' முடிந்த 'தண்ணீர் சண்டை'... சென்னையில் 'பெண்ணிற்கு நேர்ந்த சோகம்'!
- 'நான் மயக்கத்துல இருந்தேன்'...'சென்னையின் பிரபல மருத்துவமனையில்'...'பெண்ணிற்கு' நேர்ந்த கொடூரம்!
- 'சப்-இன்ஸ்பெக்டர்னா..?'.. காய்ச்சி எடுத்த அசிஸ்டண்ட் கமிஷ்னர்.. பரபரப்பு வீடியோ!
- 'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!
- ’அடேய் ... ஓடுனா மட்டும் விட்ருவோமா..’ நேசமணி ஸ்டைலில் சென்னையில் நடந்த பரபரப்பு சேஸிங்!
- 'சரியா ஒத்துழைக்கல'... 'ஆண்களின் பிறப்புறுப்பை'... அறுத்த 'சைக்கோ'வின் பகீர் வாக்குமூலம் !
- ‘காவல் நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை..’ மதுரையில் நடந்த பயங்கரம்..
- ‘காதலால் சிறுமியைக் கடத்திய இளைஞர்..’ தேடிப் போய் கொடூரமாகக் கொன்ற கும்பல்..