திருடிய கடையிலேயே பொருளை விற்ற பலே ஊழியர்.. எதார்த்தமா ரூமுக்குள்ள போனப்போ உரிமையாளருக்கு தெரியவந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வேலைபார்க்கும் கடையில் உள்ள பொருட்களை திருடி, அதனை கடையின் உரிமையாளரிடமே விற்றுவந்த நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | India Vs Pakistan: ஹர்திக் பாண்டியாவின் அசால்ட் சம்பவம்.. மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி போட்ட பதிவு.. பக்காவா பொருந்துதே..!

அதிர்ச்சி

சென்னையின் மைலாப்பூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் சிலை மற்றும் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இந்த கடையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ராணிப்பேட்டையச் சேர்ந்த சண்முகம் என்பவர் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சண்முகத்தின் அறைக்குள் எதேச்சையாக சென்றிருக்கிறார் கடையின் உரிமையாளரான தியாகராஜன். அப்போது, அந்த அறைக்குள் 9 சிலைகள் இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

புகார்

இந்நிலையில், இதுகுறித்து அவர் சண்முகத்திடம் விசாரிக்க, அவை அந்த கடையில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, தியாகராஜன் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடராக சண்முகத்தை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் போலீசார். அப்போது, பாரிஸ் பகுதிகளுக்கு சென்று கடைக்கு தேவையான உலோக சிலைகளை வாங்கி  வருவதும் அப்படி வாங்கி வரும் போது சண்முகம் சில சிலைகளை திருடிவந்ததும் தெரியவந்திருக்கிறது.

அதன்பின்னர், பாரிசில் இருந்து வாங்கி வந்ததாக கூறி ஏற்கனவே திருடிய சிலைகளை கடையின் உரிமையாளரான தியாகராஜனிடம் விற்பனை செய்து வந்திருக்கிறார் சண்முகம். இப்படி கடந்த சில மாதங்களில் 15க்கும் மேற்பட்ட சிலைகளை சண்முகம், தியாகராஜனிடம் விற்பனை செய்திருக்கிறார். மேலும், காவல்துறையினரிடமும் தனக்கு வழங்கப்படும் ஊதியம் போதவில்லை எனவும் அதன் காரணமாகவே இப்படி செய்ததாகவும் சண்முகம் தெரிவித்ததாக தெரிகிறது.

கைது

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக சண்முகம் இதேபோல தன்னை ஏமாற்றி வந்துள்ளதாகவும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சத்திற்கும் அதிகம் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கடையின் உரிமையாளரான தியாகராஜன். இதனையடுத்து, கடையில் மேலாளராக இருந்த சண்முகத்தை காவல்த்துறையினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Also Read | "சில சமயங்கள்ல நாமும் இந்தமாதிரி முடிவை எடுக்கணும்".. தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் மூலமாக ஆனந்த் மஹிந்திரா சொன்ன மேசேஜ்.. !

MAN, ARREST, ARTWORKS, SOLD, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்