"பைக்குள்ள என்ன நெளியுற மாதிரி இருக்கு".. பயணி மீது வந்த சந்தேகம்.. யம்மாடி இவ்வளவையுமா Bag-ல எடுத்துட்டு வந்தாரு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாட்டில் இருந்து பாம்புகள், குரங்குகள் மற்றும் ஆமைகளை கடத்திவர முயன்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.

Advertising
>
Advertising

பரிசோதனை

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று தாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில் பயணித்த மக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் வித்தியாசமான கூடை மற்றும் பையுடன் வந்திருக்கிறார். அவரை கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனையடுத்து அவரை பரிசோதிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் நடந்த பரிசோதனையில் அந்த இளைஞர் கொண்டுவந்த கூடையில் பாம்புகள், ஆமை மற்றும் சிறிய குரங்குகள் இருப்பதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த 21 வயதான முகமது ஷகீல் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில்  உள்ள மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் அந்த விலங்குகளை சோதனையிட்டனா்.

விலங்குகள்

அப்போது, வட அமெரிக்காவில் உள்ள கிங் ஸ்நேக் என்ற விஷமற்ற பதினைந்து பாம்புகளும், ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் எனற 5 மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க நாட்டில் சேஷல்ஸ் தீவில் அதிகம் காணப்படும் அல்ட்ரா பிராட் என்ற 2 ஆமைகள் மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா என்ற ஒரு குரங்கு குட்டி என மொத்தம் 23 விலங்குகள் முகமதுவின் கூடையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இவை விஷமற்ற பாம்புகள் எனச் சொல்லப்படுகின்றன. இந்நிலையில், மீண்டும் இந்த விலங்குகளை பாங்காங்கிற்கே அனுப்ப அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல வகை விலங்குகளுடன் வந்த நபரை அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

CHENNAI, AIRPORT, SNAKES, சென்னை, விமானநிலையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்