பேஸ்புக் ஃபேக் ஐடில 'அப்லோட்' பண்ணினப்போதான் எங்களுக்கே தெரிஞ்சுது...! 'சிறார் ஆபாசப்பட விவகாரம்...' தட்டித் தூக்கிய போலீசார்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சிறார்களின் ஆபாசப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி என்ற நபர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆபாச இணையதளங்களில் இருந்து சிறுமிகளின் ஆபாசப்படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து, தனது போலியான முகநூல் பக்கத்திலும், வாட்ஸ் அப்பிலும் அதனை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட காவல்துறையின் சமூக ஊடகவியல் பிரிவினர், சமூக ஊடகங்களை கண்காணித்து வந்தபோது குருசாமியின் இந்த செயலை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குருசாமியை ஜேடர்பாளையம் போலீசார் தீவிரமாக கண்காணித்து , சரியான நேரத்தில் கைது செய்தனர். மேலும் குருசாமியின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கட்டுக்குள்' வராத கொரோனா... 'விட்டுக் கொடுக்காத' சீனர்கள்... '2-3 மணி' நேரம் மட்டுமே உறங்கும் 'மருத்துவர்கள்'... சீனா வெளியிட்ட 'கண்கலங்க வைக்கும்' புகைப்படங்கள்...
- குழந்தைகளின்... சட்டவிரோத வீடியோக்கள்... தமிழகத்தில் முதல் ‘கைது’...!
- 'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'?...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை!
- ‘மனைவியின் அண்ணனுக்கு..’ வாட்ஸ் அப்பில்.. ‘கணவன் அனுப்பிய அதிரவைக்கும் புகைப்படம்..’