மாடலிங் பெண்கள் தான் டார்கெட்டே.. இளைஞரின் தினுசான உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பரப்புவேன் என கூறி மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | 30 வருஷ காத்திருப்பு.. சர்ப்ரைஸ் கொடுத்த வெப் தொலைநோக்கி.. சந்தோஷத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் அதனை தவறான நோக்கத்திற்காகவும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாடலிங் துறையில் விருப்பப்படும் பெண்களை குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது சென்னை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புகார்

சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனக்கு மாடலிங் துறையில் விருப்பம் இருப்பதாக சமூக வலை தளங்களில் பதிவிட்டதாகவும் அதனை தொடர்ந்து தன்னை ஒருவர் தொடர்பு கொண்டு மாடலிங்கில் வாய்ப்பு இருப்பதாக பேசியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த மர்ம நபர் அனுப்பிய குறுஞ்செய்தியில் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் பிராஜெக்ட்க்கு இந்திய அழகிகள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அப்பெண் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

புகைப்படம்

இதனையடுத்து அந்த போன் நம்பருக்கு தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது தன்னுடைய கவர்ச்சிகர புகைப்படங்கள் அனுப்பிவைக்கும்படி அந்த மர்ம நபர் தெரிவித்ததாகவும் காவல்துறையிடத்தில் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து, தன்னுடைய புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த பெண். அதன் பிறகு தனக்கு 3 லட்ச ரூபாய் தரவில்லை என்றால் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவேன் என அந்த நபர் தன்னை மிரட்டியதாக தனது புகாரில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

கைது

இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில்  கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர் திவ்யகுமாரி தலைமையிலான போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ரஞ்சித் ஏற்கனவே, சென்னை கொளத்தூர் பகுதியில் இதேபோன்று மாடலிங் துறையில் வாய்ப்பு வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றிய வழக்கில் சிறை சென்றவர் என்பதும்  தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ரஞ்சித் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Also Read | க்ளோனிங் ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த ஆராய்ச்சியாளர்கள்.. அவங்க தேர்ந்தெடுத்த விலங்கு தான் ஹைலைட்டான விஷயம்..!

MAN, ARREST, THREATENING, GIRL, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்