டியூசன் ‘வாட்ஸ் ஆப்’ குரூப்பில்... மாணவரின் ‘தந்தை’ ஷேர் செய்த வீடியோ... அதிர்ந்து போன பெற்றோர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாணவர்களின் பெற்றோர்களுக்கான வாட்ஸ் ஆப் குழுவில், சட்டவிரோத வீடியோக்களை அனுப்பிய, மாணவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் அகஸ்தீஸ்வரம் அடுத்த கொட்டாரம் பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதேப் பகுதியில் செல்வகுமார் என்பவர் நடத்தி வரும் டியூசன் சென்ட்டரில் சேர்ந்து படித்து வருகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களின் வருகை, படிப்பு விவரம் உள்ளிட்ட செயல்பாடுகளை, பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் வாட்ஸ் ஆப் எண்ணை கொண்டு குரூப் ஒன்றை உருவாக்கி செல்வகுமார் வைத்துள்ளார். 

இந்நிலையில் இந்த வாட்ஸ் ஆப் குரூப்பிற்கு மாணவர் ஒருவரின் தந்தை எண்ணில் இருந்து, சட்டவிரோத (ஆபாச) வீடியோ ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்து அந்த குரூப்பில் இருந்த மற்ற பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து டியூசன் மாஸ்டர் செல்வக்குமாரிடம் தெரிவித்தனர். பின்னர் அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த டியூசன் சென்ட்டரில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை முத்துராஜ் (49) என்பவர், சட்டவிரோத வீடியோவை அனுப்பியது தெரியவந்தது.

பில்டிங் கான்ட்ராக்டரான இவர், அவ்வப்போது நண்பர்களுக்கு சட்டவிரோத வீடியோக்களை அனுப்பி வந்த நிலையில், பெற்றோர்களின் குழுவிலும் வீடியோவை பகிர்ந்துள்ளார். சட்டவிரோதமாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சட்டவிரோத வீடியோக்களை பகிர்ந்த குற்றத்தின்கீழ் முத்துராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WHATSAPP, STUDENTS, PARENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்