"உங்க வீட்டுக்குள்ள புதையல் இருக்கு".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் அருகே வீட்டில் புதையல் எடுத்து தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய நபரை காவல்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | காரில் எரிந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர்.. வேறோரு ஊரில் சிக்கிய திகிலூட்டும் பின்னணி!!

வாழப்பாடி அருகே அமைந்துள்ளது கீரப்பட்டி. மலை கிராமமான இங்கே பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 42 ஆகும். பழனியம்மாள் விவசாய வேலைகளை செய்து வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டு ஒருநாள் பழனியம்மாள் வீட்டில் இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வந்திருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் இருந்த அவரிடம் என்ன வேண்டும் என பழனியம்மாள் விசாரித்திருக்கிறார்.

அப்போது அந்த மர்ம நபர் தான் ஒரு மந்திரவாதி என்றும், தன்னால் புதையல்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து பழனியம்மாள் வீட்டிலும் புதையல் இருப்பதாகவும் அதனை வெளியே எடுக்க வேண்டும் என்றால் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் தனது சித்து வேலையை அவர் காட்டியுள்ளார்.

அதாவது, புதையலை வீட்டில் இருந்து எடுக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வரையில் செலவு ஆகும் என அந்த மர்ம நபர் சொல்லி இருக்கிறார். இதனை பழனியம்மாளும் நம்பி உள்ளார். அதன்பிறகு தான் சேமித்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை அந்த நபரிடம் பழனியம்மாள் கொடுத்து இருக்கிறார். சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறிய அந்த நபர் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். ஆனால், அவர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பழனியம்மாள் இதுகுறித்து காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

இதனையடுத்து புதையல் எடுத்துத் தருவதாக ஒரு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு தலைமறைவான நபரை பிடிக்க வாழப்பாடி போலீஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கினர். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள இறையமங்கலம் பகுதியை சேர்ந்த 41 வயதான செல்வராஜ் என்பவரை வியாழக்கிழமை அன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டுக்குள் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம்.. மேரிலேண்ட் ஆளுநரான முதல் இந்திய பெண்.. யாருப்பா இவங்க?

MAN, ARREST, CHEATING CASE, WOMAN, TREASURE, HOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்